எந்த உற்சாக பானத்திலும்
சுவைக்கு தேவை
சர்க்கரை என்று இனிப்பு .
அக்கறை உள்ளவர்
வெள்ளை சர்க்கரையை
தொல்லையென ஒதுக்கி
ஆரோக்கியத்திற்கு
எல்லை வகுத்து
தேடுவர் பிரவுன் சுகரை!
உன்னிடம் இருக்கும்
எண்ணிலா இனிப்பு
சுவையுடன் ஆரோக்கிய
நிறைவைத் தருவதால்
உறைவிடம் உனக்குத்தான்
மெல்ல மெல்ல புரிந்து
அள்ள அள்ள குறையா
தெள்ளத் தெளிவுடன்
புகழ்கிறேன் உன்னை
பிரவுன் சுகரே……
உஷா முத்துராமன்