அமுது ஆற்றும் வரை
அழும் குழந்தைக்கு
ஆறுதல் தருமாம்
சிப்பர் நிப்பிள்…
அடிமையான பிஞ்சு
அமுதினை
தேடித் தேடி…..
‘மாயப்பால்’ அருந்தி
உறங்கிப் போகும்…
வைக்கோல் கன்றை
காட்டிக் காட்டி
பசுவிடம் பால்
கறப்பதைப் போல்….
இருப்பினும்…..
பீடிங் பாட்டில் தரும் வரை… இதுவே
“முதலுதவி”….
மழலையை உறங்க வைக்கும் தோழி…..
S. முத்துக்குமார்