படம் பார்த்து கவி: ✨உ(ருவிலா)றவெனவாய்✨

by admin 2
49 views

அரூபியெனில்
அறிவுக்கெட்டியவரை
ஆண்டவனே

ஆண்டவனுக்கு
இருக்கிறதோ
இதுவெனவடிவமும்

ஈரேழுலகாழும்
ஈசனின்
உருவிதுவெனவே

உரைத்திடவியலுமோ
ஊராழ்வோரும்
ஊகித்தேனும்

எல்லோர் எண்ணத்திலும்
ஏக்கமாகியே

ஏற்றமாய்
ஐயமற ஐந்தவித்தவனாய்

ஒளிர்வித்து ஒளிர்பவனாய்
ஓங்கியுயர்ந்தே

ஓங்காரமாய்
ஔடதமிலா
ஔடதவாதியவனாய்

உருவமில்லா உறவெனவாய்
உடனிருந்தே

உயிரும் மெய்யுமாய்
உணர்விலெழுந்த

வரிகளுக்கு
வலிமையுடன்
உயிரளித்தே

விலகிடினும்
விலகிடுமோ
விலையேறிய

உருவமிலா அரூபியின் உறவிதுவும்

ஜே ஜெயபிரபா

You may also like

Leave a Comment

error: Content is protected !!