உற்றார் சுற்றார் சூழ,
மேளதாளம் முழங்க,
அம்மி மிதித்து, அருந்ததி பார்த்தோ,
மோதிரம் அணிவித்தோ,
வேதம் ஒதியோ, இருமனம் இணைவிக்கும்
பந்தமாகியது
மண மலர்!
காற்றில் தவழ்ந்து, மனம் வீசும் முன் சூரைக் காற்றில் உதிர்ந்து போனதேனோ?
காதலில் ஜெயித்தும், திருமணத்தில் தோற்பதேனோ?
கணவன் மனைவி பிரியலாம்,
பெற்றோர் பிரியலாகுமா?
அவசரக் கோலமாய், அள்ளித்தெளித்த
வார்த்தைகளால்,
இரு மனம் உடைந்து,
இரு குடும்பங்கள் உடைந்து,
பரிதவிக்கும் குழவிகளை,
சுமந்த கருவறையின் கதறல்கள், சேவிமடுக்கவில்லையா?
உணர்ந்து பேசி
உருவாக்கிய கூடு உடையலாகுமா?
கண்ணில் தெரியாதது, கருத்தில் பதியாது.
மனக்கண் கொண்டு பார்த்தால் மலையும் துரும்பை!
இல்லைவெனில்
மடுவும் சாகரமே!!!
இப்படிக்கு
சுஜாதா.
படம் பார்த்த கவி: மனமுடைக்கும் மன முறிவு
previous post