படித்ததில் பிடித்தது: கணவன் பாடு

by Nirmal
28 views

மனைவி கணவனை திட்ட முடிவு செய்துவிட்டால் அந்த ஆண்டவனே வந்தாலும் கணவனை காப்பாற்ற முடியாது

மனைவி: பால் காய்ச்சி வைக்கச் சொன்னேனே காய்ச்சிட்டீங்களா?

கணவன்: இல்ல அதான் அதுக்குள்ள தான் பாத்திரம் கழுவச் சொன்னியே….

மனைவி – பாத்திரம் கழுவி விட்டீர்களா!

கணவன் – இல்ல.. அதுக்குள்ள தான், குழம்பு பொரியலுக்கு காய கட் பண்ண சொன்னியே?

மனைவி – சரி காய் வெட்டி விட்டீர்களா?

கணவன் – அதுக்குள்ள தான் வெங்காயம் பூண்டு உறிச்சி கட் பண்ண சொன்னியே !

மனைவி – சரி வெங்காயம் பூண்டு உரிச்சாச்சா?

கணவன் – அதற்கு முன்னாடி அரிசி கொஞ்ச நேரம் ஊறனும். முதல்ல அதை ஊற வைக்க சொன்னியே.

மனைவி – சரி அரிசியாவது ஊற வைச்சீங்களா !

கணவன் – நீதான் அதுக்குள்ள பாப்பாக்கு நாளைக்கு போட்டு போகற யூனிபார்ம வாஷிங் மிஷின்ல போடனும்னு சொன்னியே!

மனைவி – சரி அதையாவது செஞ்சிங்களா?

கணவன் – டைம் ஆச்சி அவ இன்னும் எழுந்து இருக்க வில்லை ! நீ தான் பாப்பாவை எழுப்பி பாத்ரூம் போக வைக்க சொன்னாயே!

மனைவி – சரி பாப்பவையாவது எழுப்பி விட்டீர்களா !

கணவன் – இ..ல்..ல..

மனைவி – சரி வேற என்னதா பண்ணிட்டு இருக்கிங்க.

கணவன் – காலையில் எழுந்த முதல் ஒரு வாய் காப்பி குடிக்க வில்லை அதான்
எனக்கு காப்பி போட்டுட்டு இருக்கேன்.

மனைவி – ( கோபத்தில் ) உங்களை கட்டிகிட்டு நான் படும் கஷ்டம் இருக்கே!

கணவன்:- ????????????

You may also like

Leave a Comment

error: Content is protected !!