படித்ததில் பிடித்தது: விவகாரமான விளம்பரம்

by Nirmal
23 views

ஒரு டாக்டர் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று ஒரு விளம்பரம் செய்தார்!

அதாவது தன்னிடம் வரும் நோயாளிகள் 500₹ ஃபீஸ் கொடுக்க வேண்டும், அப்படி டாக்டர் அவர்களின் வியாதியை குணப்படுத்த வில்லை என்றால் டாக்டர் அவர்களுக்கு 1000₹ தந்துவிடுவதாக விளம்பரம் செய்தார்.

விளம்பரத்தை பார்த்த ஒருவர் டாக்டரை ஏமாற்றி எப்படியாவது 1000₹ ஆட்டய போடனும்

என்று நினைப்பில் அவரை சந்தித்தார்!

டாக்டர் அவரிடம் என்ன பிரச்சினை உங்களுக்கு என்று கேட்க அதற்கு அவர் டாக்டர் எனக்கு நாக்கில் சுத்தமாக ருசி இல்லை என்று சொல்ல ! டாக்டரும் எல்லா சோதனை செய்து பார்த்து விட்டு இவர் தம்மிடம் ஏமாற்றுகிறார் என்று தெரிந்து கொண்டு! அவரின் நர்சை கூப்பிட்டார்!

நர்ஸ் அந்த அலமாரியில் 11 ஆம் நம்பர் பாட்டிலை எடுத்து இவர் நாக்கில் இரண்டு சொட்டு விடுங்கள் என்று சொல்ல ! நர்சும் அதே மாதிரி ரெண்டு சொட்டு விட! வந்தவர் டாக்டர் என்ன பெட்ரோல் போய் நாக்கில் விடரீங்க என்று சொல்ல !

பார்த்தீர்களா உங்களுக்கு நாக்கில் சுவை வந்து விட்டது!

நர்ஸ் இவரிடம் 500₹ ஃபீஸ் வாங்கிட்டு அனுப்புங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

என்னடா இப்படி ஆகி விட்டதே என்று சரி அடுத்த வாரம் பார்ப்போம் என்று ஒரு வாரம் கழித்து டாக்டரை போய் பார்த்தார். டாக்டர் வர வர எனக்கு நியாபக சக்தி சுத்தமா போய் விட்டது! எப்படியாவது குண படுத்துங்க! என்று சொல்ல டாக்டரும் எல்லா சோதனைகளும் செய்து விட்டு நர்சிடம் , அந்த அலமாரியில் 11ஆம் நம்பர் பாட்டில் எடுத்து வா என்று சொன்னது தான் போதும்!

வந்தவர் ஐயோ டாக்டர் அலமாரியில் இருக்கும் 11 ஆம் நம்பர் பாட்டில் பெட்ரோல் ஆச்சே! என்று சொல்ல !

பார்த்தீர்களா உங்களுக்கு நியாபக சக்தி வந்து விட்டது, போன வாரம் பார்த்தீர்கள் இப்பவும் உங்கள் நினைவில் இருக்கு பாருங்க! 500₹ கொடுத்து விட்டு செல்லுங்கள் என்று டாக்டர் சொன்னார்.

இப்படியே ஒரு வாரம் ஓடியது சரி இன்னைக்கு டாக்டர் கிட்ட எப்படியாவது 1000₹ வாங்கிவிடனும் என்று முடிவு செய்தார்.

இப்போ டாக்டரை சந்தித்து தனக்கு கண் பார்வை சரியாக தெரியவில்லை என்று சொல்ல டாக்டரும் அவரை நன்றாக சோதித்து

விட்டு உங்களுக்கு வந்து இருக்கும் வியாதியை என்னால் குண படுத்த முடியவில்லை நான் தோற்று விட்டேன்! இந்தாங்க 1000₹ என்று நோட்டை நீட்டினார்!

பணத்தை !

பணத்தை பார்த்தவுடன் நம்ம ஆளுக்கு ஒரே கோபம் என்ன டாக்டர் என்னை ஏமாற்ற பார்க்கிறீர்கள் 1000₹ தருகிறீர்கள் என்று சொல்லி விட்டு வெறும் 100₹ கொடுக்கிறீர்கள் என்று சொல்ல!

டாக்டர் சிரித்து கொண்டே சொன்னாராம் பார்த்தீர்களா இப்பொழுது உங்களுக்கு கண் நன்றாக தெரிகிறது.

நர்ஸ் இவர் கிட்ட 500₹ வாங்கிட்டு அனுப்புங்க என்றாராம்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!