எழுதியவர்: இ.டி.ஹேமமாலினி
கோவில் பயணம்: பூரி ஜெகந்நாத் கோவில், ஒடிசா
ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி ஜெகந்நாத் கோவில், இந்தியாவின் முக்கியமான ஆன்மிகத் தலங்களில் ஒன்று. இந்தக் கோவில், விஷ்ணுவின் வடிவமான ஜெகந்நாத் கடவுளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோவில், நான்கு திசைகளிலும் நான்கு வாயில்களைக் கொண்டுள்ளது. அதன் சிறப்பு என்னவென்றால், கோவிலின் உள்ளே நுழைந்ததும் கடல் அலைகளின் சத்தம் கேட்பதில்லை.
ஆனால், வெளியே வந்தால் மீண்டும் கேட்கும். இது அங்கே ஒரு அதிசயமாகக் கூறப்படுகிறது.
இங்கே ஒவ்வொரு வருடமும் நடைபெறும் ரத யாத்திரை உலகப் புகழ் பெற்றது. அப்போது ஜெகந்நாத், பலபத்திரர் மற்றும் சுபத்திரை ஆகிய மூன்று தெய்வங்களின் சிலைகள் பெரிய தேரில் அமர்த்தப்பட்டு, பக்தர்களால் இழுத்துச் செல்லப்படும்.
இந்த நிகழ்வைக் காண்பது ஒரு தெய்வீக அனுபவம். இந்தக் கோவிலில் வழங்கப்படும் பிரசாதம் ‘மகா பிரசாதம்’ என்று அழைக்கப்படுகிறது. இது 56 வகையான உணவுகளைக் கொண்டது. இந்த கோவிலின் புனிதத்தன்மை, வரலாற்றுச் சிறப்பு, மற்றும் ரத யாத்திரையின் பிரம்மாண்டம் ஆகிய காரணங்களுக்காக நான் அங்கு செல்ல ஆசைப்படுகிறேன்.
இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.
