எழுதியவர்: நா.பா.மீரா
தமிழும், தமிழர்களும் அதிகம் நிறைந்துள்ள மலேசியா நாட்டுக்குப் பயணம் போக வேண்டும் என்பது என் நீண்ட வருட ஆசை.
கோலாலம்பூரிலிருந்து சுமார் 13 கிமீ வடக்கே அமைந்துள்ள 320 மீ உயரம் உடைய பத்து குகை முருகன் கோயில் . செங்குத்தாக அமைந்துள்ள 272 படிகள் கொண்ட இந்தக் கோவிலை கூகுளில் மட்டுமே பார்த்து , நேரில் பார்த்தே ஆக வேண்டும் என்று மனத்தில்உறுதி எடுத்து வைத்துள்ளேன், முருகன் அருளும், வழியும் புரிவார் என்ற நம்பிக்கையில்.
நான் பிறந்த தமிழ் மண்ணில் உள்ள அனைத்து முருகர் கோவில்களையும் இன்னும் பார்த்து முடிக்கவில்லை என்பது தனிக்கதை. அறுபடையில், இன்னும் பழனி பாக்கி. தமிழ் மண்ணில் உள்ள முருகர் கோவில்களையும் , கோலாலம்பூரின் சிறப்புமிகு முருகரையும் தரிசிக்கும் பாக்கியத்தை பத்து மலை முருகரே அருளுவார் எனக் காத்திருக்கிறேன்.
ஓம் சரவணா பவா ….
இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.