பிரம்மசாரியின் ஆலிங்கனம்!

by Nirmal
189 views

உச்சிஷ்ட கணபதியை மூலவராகக் கொண்ட ஆசியாவின் மிகப்பெரிய விநாயகர் கோயில் திருநெல்வேலியில் இருக்கிறது.

விநாயகப் பெருமானின் 32 வடிவங்களில் ஒன்று உச்சிஷ்ட கணபதி.

அவர் பிரம்மச்சாரி என்று ஒரு தகவல் இருக்க, ஒரு பெண்ணை ஆலிங்கனம் செய்தபடி உள்ள கோலம் அபூர்வமானது.

இதுவே உச்சிஷ்ட கணபதி வடிவம். இவரை வணங்கினால் குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.

உச்சிஷ்டகணபதி என்பதற்கு எச்சில் பட்ட விநாயகர் என்பது பொருள். தூய்மையே தெய்வம் என்பது நம் கோட்பாடு.

ஒருநாள் குளிக்காவிட்டாலும் வழிபாட்டுக்கு தகுதியற்றவர்களாக நம்மை எண்ணுகிறோம். தீட்டுப்பட்டவர் நம்மைத் தொட்டால் தற்காலிகமாக கெட்டு விட்டதாக நம்மை நாமே புறக்கணிக்கிறோம்.

தூய்மையாக இருப்பது அவசியம் என்றாலும் அசுசியான பொருட்களைக் கண்டு அருவருப்பது கூடாது. சுத்தம், அசுத்தம் இரண்டையும் கடந்து செல்வதே பக்குவநிலை.

பரந்த மனம் ஒருவனிடம் இருந்துவிட்டால் எங்கும் அழுக்கு இல்லை என்பதை உணரலாம். செடிக்கு மாட்டின் சாணம், மனித மலம் என அழுக்கே உணவாகிறது.

அதுவே நம்மிடம் விளைபொருளாகத் திரும்பி வருகிறது. இயற்கை முழுவதும் இந்த நிகழ்வைக் காணலாம். அழுக்கை அழுக்காக கருதக் கூடாது என்பதை உச்சிஷ்ட கணபதி நமக்கு உணர்த்துகிறார்.

உணவு உண்டபின் எச்சில் இலையைத் தூர எறிகிறோம். அதை அழுக்காகப் பார்க்காமல் உச்சிஷ்ட கணபதியே எழுந்தருளியிருப்பதாக எண்ண வேண்டும்.

அழுக்கையும் இறைவனாகப் பார்க்கும் தகுதியுடையவர்களுக்காக எழுப்பப்பட்டது உச்சிஷ்ட விநாயகர் கோயில்.

You may also like

1 comment

Avatar
S.Asuvathi September 18, 2023 - 7:11 pm

🙏🙏

Leave a Comment

error: Content is protected !!