முதல் காதல்

by ரியா ராம்
206 views

முதல் காதல்



        அந்த அழகிய கிராமத்தில் உள்ள அந்த பெரிய வீட்டில் ஒரு அறைக்குள் அந்த வீட்டு பெண் தன் பிரசவ வலியை தாங்க முடியாமல் கத்தி கொண்டிருந்தாள்.  அந்த அறைக்கு வெளியே அந்த பெண்ணின் கணவர், அண்ணன் , இருவரும் பதட்டமாக நின்றனர் .

    அப்போது உள்ளிருந்து வெளியே வந்த மூதாட்டி எய்யா ராசு உனக்கு பொட்ட புள்ள பிறந்து இருக்கியா , இறந்த உன் அம்மாவே உனக்கு மகளா பிறந்து இருக்கா உன் பொண்டாட்டி புள்ள இரண்டு பேரும் நல்லா இருக்காங்க. இரு நான் போய் உன் பொண்ண தூக்கிட்டு வாரேன் , உன் தங்கச்சி தன்  மருமகளை தான் தான் சுத்தம் செய்வேன்னு சுத்தம் செஞ்சிட்டு இருக்கா, அதான் நான்  உங்க கிட்ட தகவல் சொல்ல வந்தேன் . இரு நான் போய் உன் மவள தூக்கிட்டு வாரேன் என்று அவர்களை பேச விடாமல் தானே எல்லாம் பேசி விட்டு அவர்கள் பேச வருவதை கேட்காமல் அறைக்குள் சென்று விட்டது அந்த மூதாட்டி.  பெரும்பாலும் அந்த கிராமத்தில் உள்ள பல பெண்களுக்கு பிரசவம் பார்த்தது இவர் தான். அந்த கிராம மக்களால் கைராசியானவர் என்று அழைக்கப்படுபவர் .

        அவர் உள்ளே சென்ற உடனே அந்த ராசு என்று அழைக்கப்பட்டவர் தன் அருகில் இருந்த தன் மனைவியின் அண்ணனை அணைத்து கொண்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் அதன் பின் அவர் அருகில் நின்ற தன் மகனை பார்த்து ஏய்யா சுரேஷ்  உனக்கு தங்கச்சி பிறந்து இருக்கிறாயா நீ தான் அவள நல்லா பார்த்துக்க வேண்டும் என்றார். அதை கேட்ட அந்த நான்கு வயது சிறுவன் தன் தந்தையிடம் சரி என்று கூறினான்.


        உடனே அவர் சுரேஷ்  அருகில் இருந்த தன் மருமகனிடம்  ஏடேய் என்னல அமைதியா இருக்க என்றார் . அவர் அருகில் நின்ற ஐந்து வயது சிறுவனை பார்த்து ,  உடனே அவன் இல்ல மாமா சுரேஷ் க்கு தங்கச்சினா எனக்கு என்ன வேணும் அப்படின்னு யோசிச்சுட்டு இருக்கேன் என்றான்.

     உடனே அவர் உனக்கு முறைப் பொண்ணுடா சரவணா என்றார் உடனே அவனும் வேகமாக தலையாட்டினான்.

      அதன் பின் ராசுவின் தங்கை தன் மருமகளை வெளியே தூக்கி வர அனைவரும் அந்த குட்டி தேவதையை பார்த்தனர். அந்த இளம் ரோஜா மொட்டு போல இருந்த அந்த குழந்தை எல்லோரையும் பார்த்து சிரித்து  கொண்டிருந்தது. அதை பார்த்த அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர்.


          முப்பதாவது நாள் அந்த குழந்தைக்கு சந்தியா என்று பெயர் வைத்தனர். பெரியவர்களை விட சரவணனும் சுரேஷும் சந்தியாவை விட்டு அகலாமல் பார்த்து கொண்டனர் .இருவரையும் பள்ளிக்கு அனுப்பும் முன்பு இருவர் பெற்றோரும் படாத பாடு பட்டனர்.  அவர்களிடம் படித்தால் தான் அவளுக்கு சொல்லி தர முடியும் என்று கூறி அவர்களை ஒருவழியாக படிக்க அனுப்பி வைத்தனர்.  அவர்களும் தாங்கள் ஒன்றாக ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் தான் படிப்போம் என்று அடம் பிடித்ததால் ஒரு வழியாக இருவரையும் ஒன்றாக ஒரே வகுப்பில் சேர்த்தனர் .

    பள்ளி செல்லும் நேரம் தவிர மற்ற நேரம் முழுவதும் அவள் அருகிலே இருந்தனர். அவள் அழுதால் பெற்றவர்களை விட இவர்கள் அதிகமாக துடித்தனர்.  சந்தியாவை இருவரும் தங்கள் கண்ணுக்குள் வைத்து பார்த்து கொண்டனர் .

    சந்தியாவுக்கு ஒரு வயதில் மொட்டை போட்டு காது குத்தும் போது அவளை விட இவர்கள் இருவரும் தான் அதிகமாக அழுதனர் அவர்களை சமாதானப்படுத்தும் முன் பெற்றவர்கள் ஒரு வழியாகி விட்டனர். இதற்க்கு நடுவில் சரவணனுக்கு ஒரு தங்கை பிறந்தாள் அவள் பெயர் சங்கரி அவளையும் சேர்த்து சந்தியா சங்கரி இருவரையும் நன்றாக பார்த்து கொண்டனர்


       அதன் பின் சந்தியா நடக்க பழகியதில் இருந்து  பள்ளி செல்லும் போது என் எல்லாம் இருவரும் துணையாக இருந்தனர். அவள் வயதிற்கு வந்த உடனே அவளுக்கு அந்த ஊரே வியக்கும் வண்ணம் பங்ஷன் நடத்தினர். அதில் இருந்து தான் சரவணா சந்தியா மேல் காதல் வயப்பட்டான்.  ஆனால் தன் படிப்பு அவள் படிப்பு என அனைத்தையும் கருத்தில் கொண்டு தன் காதலை மறைத்தான் .

     அதன் பின் சந்தியா சங்கரி இருவரும் எங்கு சென்றாலும் அவர்கள் இருவருக்கும் பாதுகாப்பாக சரவணா சுரேஷ் இருவரும் சென்றனர்.

          அப்படியே வருடங்கள் ஓட சரவணா  சுரேஷ் இருவரும் தங்கள் படிப்பை முடித்து விட்டு இருவரும் தங்கள் காலேஜில் நடந்த கேம்பஸ் இன்டர்வியூ வில் வேலை கிடைத்து சென்னை சென்றனர் . அங்கே வேலை எல்லாம் நல்லபடியாக அமைந்த உடனே அங்கேயே ஒரு வீடு பார்த்து அப்படியே தன் பெற்றோர் சகோதரி என எல்லாரையும் அழைத்து சென்றனர். தங்கள் பிள்ளைகளுக்காக அந்த பெற்றவர்களும் தங்கள் விலை நிலங்களை குத்தகைக்கு விட்டு விட்டு அவர்களுடன் சென்னையில் தங்களுக்கென ஒரு வீட்டை வாங்கி அங்கே தங்கினர் . பெண்கள் இருவரையும் அங்கேயே ஒரு கல்லூரியில் சேர்த்து விட அவர்களும் சமத்தாக கல்லூரிக்கு சென்றனர் .

    
      சரவணா சந்தியாவை காதலிப்பது சுரேஷ்க்கு தெரியும் அவனும் தன் தங்கை கடைசி வரை தன்னுடன் இருப்பாள் என்று சந்தோசமாக இருந்தான். சரவணாவும் அவள் படிப்பு முடிந்த உடனே வீட்டில் சொல்லி திருமணம் செய்ய ஆசையுடன் இருந்தான் .

      சந்தியா சங்கரி இருவரும் மருத்துவ படிப்பு படித்து கொண்டிருந்தனர் இப்படியே வருடங்கள் ஓட ஆண்கள் இருவருக்கும் வெளி நாட்டில் மூன்று வருடம் வேலை பார்க்க வாய்ப்பு கிடைத்தது.  அவர்கள் தங்கள் குடும்பத்தை விட்டு முக்கியமாக  சந்தியா சங்கரி இருவரையும் விட்டு பிரிய மனம் இல்லாமல் யோசித்து கொண்டு இருக்க அதற்க்கு பெண்கள் இருவரும் நல்ல யோசனை கூறினர். அவர்களுக்கும் சரியென பட சந்தோசமாக கிளம்ப ஆரம்பித்தனர் .


    அதாவது பெண்கள் தங்கள் மருத்துவ படிப்பை முடித்த காரணத்தால் மேற்கொண்டு படிக்க அவர்களுடன் வருவதாக கூற அவர்களும் சந்தோசமாக சரி என்றனர் . பெற்றவர்களும் சந்தோசமாக அவர்களை அனுப்பி வைத்தனர் . அவர்கள் திரும்பி வரும் வரை தாங்கள் கிராமத்தில் இருப்பதாக கூறி அவர்களும் சரி என்று தங்கள் பயணத்தை தொடங்கினர் .


      அங்கு சென்று கம்பெனி குடுத்த வீட்டில் நால்வரும் தங்கினர் ஆண்கள் பெண்களை கல்லூரியில் விசாரித்து சேர்த்து விட்டு அவர்களும் தங்கள் வேலைகளை பார்த்தனர் .

     நல்லபடியாக படிப்பு வேலை என நாட்கள் சென்றது.  சந்தியா குழந்தை நல மருத்துவமும் சங்கரி மகப்பேறு மருத்துவமும் படித்தனர் .

   சங்கரி  சுரேஷ் இருவரும் தங்கள் காதலை வாய் மொழி யாக சொல்லாமல்  விட்டாலும் தங்கள் செயலின் மூலம் உணர்த்தினர்.  சரவணன் தன் காதலை பார்வை மூலமாக சந்தியாவிடம்
தெரிவித்தான் .அவளுக்கு அது தெரிந்தாலும் தன் காதலை அவனிடம் சொல்லாமல் நேரம் வரட்டும் என காத்திருந்தாள் .

        இப்படியே அங்கே பெண்களுக்கு இரண்டு வருட படிப்பு முடிந்து பயிற்ச்சி மருத்துவராக பணியில் சேர்ந்தனர் ஆண்களும் தங்கள் வேலையை பார்க்க  நாட்கள் நன்றாக சென்றது .

          சந்தோசமாக சென்ற அவர்கள் வாழ்க்கையில் புயலும் வந்தது. சில நாட்களாக சரவணன் யாரிடமும் சரியாக பேசாமல் சந்தியாவையும் ஒதுக்கி வந்தான் சந்தியா நினைவு தெரிந்த நாள் முதல் என்றுமே அவளிடம் கோவ  படாதவன்  யாரையும் கோபமாக பேச விடாதவன் அன்று  சங்கரிக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால்  சந்தியா  மட்டும் மருத்துவமனைக்கு சென்றாள்  வேலை முடிந்து கிளம்ப நேரமானதால்  சரவணனுக்கு அழைத்து தன்னை கூட்டி செல்லுமாறு கூற அவன் தனக்கு வேலை இருப்பதால் தன்னால் வர முடியாது என்று கோபமாக கூறி விட்டு போனை வெடுக்கென வைக்க இவள் எதோ வேலை டென்சன் என்று தன் மனதை சமாதானப்படுத்தி விட்டு வீட்டிற்க்கு கிளம்பினால். இவள் டாக்ஸியில் வந்து கொண்டிருந்த போது சிக்னலில் கார் நிக்க அப்போது சரவணன் ஒரு பெண்ணுடன் அங்கிருந்த சிறிய மருத்துவ மனைக்கு உள்ளே சென்றான். அதை பார்த்து வேகமாக அவனுக்கு போன் போட அதை எடுத்தவன் என்ன என்று கூட கேட்காமல் அவளிடம்

   சரவணா, ஏன் சந்தியா உனக்கு ஒரு தடவ சொன்னா புரியாதா நான் தான் வேல இருக்குன்னு சொல்றேன்ல மறுபடியும் மறுபடியும் போன் போடுற இனிமே எனக்கு போன் போடாத என்று கத்தி விட்டு கட் பண்ணி விட்டான்.

    உடனே இவளும் சரி வீட்டிற்க்கு வரட்டும் என்ன என்று கேட்டு கொள்வோம் என்று நினைத்தவள் கார் கிளம்ப அமைதியாக இருந்தாள்.

       அவள் வீட்டிற்க்கு சென்ற போது  சங்கரி மட்டுமே தூங்கி கொண்டு இருக்க இவளும் பிரஸ்ஸாகி விட்டு டீ போட்டு பால்கனியில் அமர்ந்து குடித்து கொண்டு சரவணாவை பற்றி யோசித்து கொண்டு இருந்தாள். அப்போது அழைப்பு மணி அடிக்கும் சத்தம் கேட்டு எழுந்து கதவை திறக்க செல்லும் முன்பு சங்கரி அப்போது தான் எழுந்து வந்தவள் அவளை உட்கார சொல்லி விட்டு அவளே சென்று கதவை திறக்க அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.

     சங்கரி கதவை திறக்க சென்ற உடனே அப்படியே அமர்ந்த சந்தியா மறுபடியும் வெளியே பார்த்து கொண்டே டீ குடித்தவள் வெகுநேரமாகியும் கதவை திறக்க சென்ற சங்கரி வராததால் அவளே வெளியே சென்றாள்.  அங்கு அதிர்ந்து நின்ற சங்கரியை பார்த்து அவளை உலுக்கியவள் ஏன் இப்படி நிக்கிற அப்படி யார் வந்து இருக்கா என்று கேட்டவள் அவள் பதில் சொல்லும் முன்பே வெளியே பார்க்க, அங்கு அவள் அண்ணன் மாமா கூடவே ஒரு பெண்ணும் இருந்தனர் . அதை பார்த்தவள் இந்த பெண்ணுடன் தானே தன் மாமா ஹாஸ்பிடல் சென்றார் என்று நினைத்தவள் அமைதியாக

     சந்தியா,  ஏன்டி இவங்கள பார்த்து தான் அதிர்ச்சியா நிக்கிற வந்தவங்கள  உள்ள விடாம என்றவள் அவள் பதிலை எதிர்பார்க்காமல் அவர்களை உள்ளே அழைத்தவள் அவளையும் இழுத்து கொண்டு உள்ளே வர அவர்கள் மூவரும் அப்படியே நின்று கொண்டிருந்தனர் . 

    சந்தியா,  என்னாச்சு எல்லாரும் இப்படி அமைதியா நிக்கிறிங்க உட்காருங்க நான் போய் டீ கொண்டு வரேன் என்று சொல்லி கிளம்பியவளின் கையை பிடித்து தடுத்து நிறுத்திய சங்கரி அவளை அவர்கள் உடன் வந்த பெண்ணின் கழுத்தை பார்க்க வைத்தாள் அவள் கழுத்தில் புதிதாக மஞ்சள் கயிறு தொங்கியது . அதை பார்த்து என்ன என்று அவளிடமே கேட்க தலையில் அடித்து கொண்ட சங்கரி ஆண்களிடம் திரும்பி அவர்களை பார்த்தாள் . அவர்கள் இருவரும் அவளை பார்க்க முடியாமல் தலையை குனிந்து நிற்க்க

    சங்கரி,  சரி சொல்லுங்க யார் இந்த பொண்ணு கழுத்துல தாலி கட்டினது என்றாள் . அதை கேட்டு அதிர்ந்த சந்தியா சங்கரி யிடம் ஏன் என்பது போல் பார்க்க அவள் கண்ணை மூடி அமைதியாக இருக்க சொன்னாள் அவளும் என்ன நடக்கிறது என்று புரியாமல் அமைதியாக இருக்க  சங்கரி இருவரையும் முறைத்து கொண்டு இருந்தாள் .   அதில் முதலில் சுரேஷ் தான் வாயை திறந்தான்.


     சுரேஷ், அட அம்மு நான் இல்ல அவன் தான் அந்த பொண்ண கல்யாணம் பண்ணி இருக்கான் என்றான் பதட்டமாக அவனை முறைத்தவள் தன் உடன் பிறப்பை பார்க்க அவன் சந்தியாவை பார்த்து கொண்டு நின்றான் .

      சங்கரி, அண்ணா என்ன இது என்றாள் ஒற்றை வார்த்தையாக உடனே அவனும் நடந்ததை கூறினான் .

 
   சரவணா,  அந்த பொண்ணு பேர்  மாயா நாங்க வேல பாக்குற இடத்துல தான் வேலை செய்றா ஊரும் நம்ம ஊர் பக்கம் தான் இங்க வேலைக்காக வந்தா அது மட்டுமில்ல அவளுக்கு அப்படின்னு யாரும் இல்ல.  நாங்க இரண்டு மாசம் முன்னாடி ஒரு பார்ட்டிக்கு போனோம் இல்ல அப்ப நான் ஜூஸ் தான் குடிச்சுட்டு இருந்தேன் ஆனா எப்படி மயங்கினேன் தெரியல ஆனா காலையில பார்க்கும் போது நானும் மாயாவும் ஒரே ரூம்ல என்று மென்று முழுங்கி கொண்டிருக்க அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த சந்தியா ஒரே ரூம்ல சொல்லுங்க மிஸ்டர் சரவணா என்றாள்.

    தன்னை மாமா என்பதை தவிர வேறு எப்படியும் அழைக்காதவள் இன்று தன்னை மிஸ்டர் என்று அழைப்பதை  கேட்டு மனம் நொந்தவன் தன்னை பார்த்து கொண்டிருந்த சந்தியாவிடம் சாரி சந்தியா நாங்க எங்கள அறியாம எங்களுக்குள்ள எல்லாமே முடிஞ்சுடுச்சு என்னால சத்தியமா நம்ப முடியல . நான் அந்த மாதிரி நடந்தேன்னு . அதான் இந்த இரண்டு மாசமா உங்க முகத்தை பார்க்காம நான் இருந்தேன் ஆனா நேத்து மாயா போன்  போட்டு தான் கர்ப்பமா இருக்குறத சொன்னா அதான் நான் இன்னிக்கு ஹாஸ்பிடல்ல போய் செக் பண்ணிட்டு வந்தோம் எப்படியோ எங்கள அறியாம நடந்தாலும் இப்ப அவ வயித்துல என்னோட வாரிசு வளருது அதான் நான் அங்க பக்கத்துல இருந்த கோவிலுக்கு கூட்டிட்டு போய் தாலி கட்டிட்டேன்.  இது உங்க அண்ணனுக்கும் தெரியும். நான் அப்படி நடந்த உடனே அவன் கிட்ட சொல்லிட்டேன்  என்று முடித்தான்.

    அதை கேட்டு அமைதியாக இருந்தவள்  எல்லோரையும் ஓர் பார்வை பார்த்து விட்டு தன் அறைக்குள் சென்றாள் . வேகமாக தன் உடமைகள் அனைத்தையும் எடுத்து கொண்டு வெளியே வந்தவள் சரவணன் முன் சென்று அவன் முகத்தை பார்த்து

   சந்தியா,   இனிமே நீங்க உங்க வொய்ப் கூட இங்க இருங்க நான் என் பிரண்ட் கூட போய் தங்கிக்கிடுறேன் சுரேஷ் நான் கிளம்பறேன் சங்கரி பாய் என்றவள் அவர்கள் பேச  கூட அனுமதி தராமல் கிளம்பி விட்டால்.

   அவள் பின்னாடியே சுரேஷும் சங்கரியும் செல்ல அவர்களை தன்னை தனியாக விடுமாறு சத்தியம் வாங்கி விட்டு சென்று விட்டாள் .

    இவர்களும் இயலாமையுடன் உள்ளே வர சரவணன் நொந்து போய் உட்காந்திருந்தான். அவன் அருகில் வந்த சங்கரி அவனை சமாதானப்படுத்தி மாயா உடன் உள்ளே அனுப்பி விட்டு சுரேஷின் மூலமாக தன் பெற்றோருக்கு மெதுவாக விஷயத்தை சொல்ல அவர்கள்  ஏன் இப்படி என நினைத்தாலும் தங்கள் பிள்ளைகளை புரிந்த தெரிந்த பெற்றவர்களாக எதுவும் பேசாமல் அவர்களை ஊருக்கு கிளம்பி வர சொல்ல அவர்களும் இன்னும் ஒரு மூன்று மாதம் முடிந்த உடன் வருவதாக சொல்லி விட்டு போனை வைத்தனர் .

     பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் விருப்ப படியே கல்யாணம் பண்ண நினைத்ததால் இந்த விஷயத்தை  சாதாரணமாக நினைத்தனர். ஏனென்றால் அவர்களுக்கு தெரியாது சந்தியா சரவணனை விரும்பியது . சரவணன் சந்தியாவை விரும்பியது மட்டுமே தெரியும் அதனால் சரி சந்தியாவுக்கு விருப்பம் இல்லாத காரணத்தால் தான் அவன் மாயவை கல்யாணம் பண்ணியதாக நினைத்தனர் . எனென்றால்  சங்கரி தன் அண்ணன் தவிர்க்க முடியாத காரணத்தால் மாயா என்ற ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணியதாக கூறி இருந்தாள்  . அதனால் தான் தன் பிள்ளைகள் அங்கிருந்து கஷ்டப்பட வேண்டாம் என்று பெற்றவர்கள் நினைத்தனர் . அவர்களுக்கு சந்தியா அவனை விரும்பியது தெரியாது .

      இங்கு தன் அம்மா அப்பாவிடம் பேசி விட்டு வைத்த சங்கரி சந்தியாவை எண்ணி கவலையுடன் இருந்தாள்.  சுரேஷ் கூட தன் தங்கையை நினைத்து கவலை அடைந்தான் . அறையின் உள்ளே மாயா மசக்கை காரணமாக படுத்து தூங்க அவள் அருகில் அமர்ந்து இருந்த சரவணனும் சந்தியாவை பற்றியே யோசித்து கொண்டு இருந்தான்.

     ஆனால் இவர்கள் யோசனைக்கு காரணமானவளோ தன் தோழியின் வீட்டிற்க்கு வந்து ஒருவழியாக அவளை சமாளித்து தன் அறைக்கு வந்து கதவை அடைத்தவள் இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த கண்ணீரை சிந்தினாள் .

    அவளுக்கு தானே தெரியும் தன் மாமா  என்றாள் எவ்வளவு பிடிக்கும் என்று தன் விவரம் தெரிந்த வயதிலிருந்து அவனை தன் மனதிற்க்குள் கணவனாக அல்லவா நினைத்து அவனுடன் வாழ்ந்து வருகிறாள்.  இந்த விசயம் அவளை தவிர வேறு யாருக்கும் தெரியாது. அவள் அவ்வளவு கவனமாக இருந்தாள் காரணம் தன் படிப்பு முடிந்து வேலையில் சேர்ந்து தன் முதல் மாத சம்பளத்தில் சரவணனுக்கு ஒரு மோதிரம் வாங்கி அதை அவனிடம் அவன் பிறந்த நாளன்று குடுத்து தன் காதலை தெரிய படுத்த வேண்டும் என தன் பள்ளி நாட்களிலேயே கனவு கண்டு வைத்தாள் . அதனால் தான் அவனை விரும்புவது அவனுக்கு தான் முதலில் தெரிய படுத்த வேண்டும் என நினைத்து தன் விருப்பத்தை யாருக்குமே தெரிய படுத்தாமல் தன் சிறு பார்வையை கூட கவனமாக இருந்தாள். ஆனால் இப்போது என நினைத்தவள் தன் வாயை மூடி அழுது கொண்டிருந்தாள் .

    தான் இனிமே அவனை நினைக்க முடியாது நினைக்கவும் கூடாது அவன் இன்னொருத்தியின் கணவன் , இன்னும் சில நாட்களில் ஒரு பிள்ளைக்கு தகப்பன் என நினைத்தவள் இன்றே தன் அழுகையை அழுது முடிக்க வேண்டும் தான் கஷ்டப் படுவது அவர்களுக்கு தெரிந்தால் அவர்கள் இன்னும் அதிகமாக வருத்தப்படுவார்கள் என்று நினைத்தவள் குளியலறைக்குள் சென்று சவரை திறந்து விட்டு தான் அவனை காதலிக்க ஆரம்பித்தது முதல் இப்போது வரை ஒவ்வொன்றாக நினைத்தாள் .

       ( என்ன தான் இரண்டு வீட்டிலும் அவர்களிடையே நீங்கள் தான் கல்யாணம் பண்ண போறிங்க என்று சொல்லாமல் இருந்தாலும் பக்கத்து வீடு, உறவினர்கள்  என எல்லாரும் அவன் தான் உனக்கு மாப்பிளை என்று சொல்லியே  அவள் மனதில் ஆசையை வளர்த்தனர் . அதற்க்கு ஏற்ப அவனும் அவளை தன் கண்ணுக்குள் வைத்து பார்த்து கொண்டான் அவளுக்கு எதுவும்  வேண்டும் என்று அவள் வாயை திறந்து கேட்கும் முன்பு அவளுக்கு எல்லாம் செய்தான். அவளுக்கு சிறிய தலைவலி என்றாலும் பதறி விடுவான் .  அவளுக்கு உடல் நிலை சரியில்லாத நேரத்தில் ஒரு அம்மாவாக கவனித்து கொள்வான்.  அவளும் தனக்கு எதுவும் வேண்டும் என்று நினைத்தாலும் அவனிடமே கேட்பாள் . அவனை காதலிக்கிறோம் என தெரிந்த உடனே அவனை நகை கடைக்கு அழைத்து சென்று இருவர் பேரின் முதல் எழுத்து SS  என ஹார்ட் சிம்பிள் போட்ட லாங் செயின் வாங்கி அவன் கையாலேயே தன் கழுத்தில் போட வைத்தாள் அவனுக்கு சந்தேகம் வராத மாதிரி .  அவனும்  இது எப்போது நடப்பது தான் என்று அவளுக்கு போட்டு விட்டான் . காரணம் அவள் சிறு வயதிலிருந்து அவளுக்கு என்ன அணிகலன்கள் வாங்கினாலும் அதை அவன் கையாலேயே போட்டு விடுவான் அதனால் தான் . அன்று முதல் இப்போது வரை அவள் அதை கலட்டாமல் தன் கழுத்திலேயே அணிந்து உள்ளாள் . அதை தாலியாகவே நினைத்து அவனுடன் கனவில் இரண்டு பிள்ளைகள் பெற்று வாழ்ந்து வருகிறாள்
ஆனால் தன் பார்வையால் கூட தன் காதலை தன் வீ்ட்டில் உள்ளவர்களிடமோ தன் அண்ணனிடமோ சங்கரியிடம் என யாருக்கும் தெரியாமல் அவனை தன் மனதில் உள்ளே வைத்து  அவனை ரசித்து கொண்டிருந்தாள்)

        எல்லாவற்றையும் நினைத்தவள்  அழுது கொண்டே குளித்து முடித்து தன் உடையை கழட்டி விட்டு டவலை கெட்டி கொண்டு வெளியே வந்தவள் தன் பேக்கில் இருந்து ஸ்கர்ட் டிசர்ட் எடுத்து அணிந்தவள் அப்போது தான் பார்த்தாள் தன் வலப்புற நெஞ்சில் யாருக்கும் தெரியாதவாறு  சரவணன் பெயரை தன் பெயரையும் சேர்த்து   SARAN  DIYA  என பச்சை குத்தி இருந்தாள்.  தான் சென்னை கல்லூரியில் படிக்கும் போதே குத்திவிட்டு.  அதை தொட்டு பார்த்தவள் இனிமே நீ என் நெஞ்சுக்குள்ள எப்போதும் இருப்ப மாமா என நினைத்தவள் தான் கொண்டு வந்த பையில் இருந்த தூக்க மாத்திரையை போட்டவள் தன் தோழிக்கு தான் தூங்க போவதாக  குறுஞ்செய்தி அனுப்பி விட்டு  அப்படியே படுத்து விட்டாள் . அவள் அழ கூடாது என்று தான் நினைத்தாள் ஆனால் அவள் கண்ணில் இருந்து கண்ணீர் அவள் அனுமதி இல்லாமல் வழிந்து கொண்டு இருந்தது .  அப்படியே மாத்திரையின் உதவியுடன் தூங்கியவள். விடியலில் தன் போனின் அழைப்பில் தான் எழுந்தாள்.  யாரென பார்க்க சங்கரி தான் அழைத்து இருந்தாள். அப்போது தான் அவளுக்கு நேற்று நடந்தது நியாபகம் வந்தது அதை நினைத்தவள் வர துடித்த கண்ணீரை அடக்கி விட்டு போனை அட்டன் செய்து காதில் வைத்தாள்.

          சங்கரி,  ஏய் எங்கடி இருக்க காலையில இருந்து போன் போடுறேன் எடுக்க மாட்டிங்கிற என்று கத்தினாள் அவளிடம் இருந்து போனை வாங்கிய சுரேஷ்

       
      சுரேஷ், பாப்பா எங்க இருக்க டா  ஏன் டா காலையில இருந்து போன் போட்டா எடுக்க மாட்டிங்கிற என்றான்

   சந்தியா,  ஐய்யோ அண்ணா நான் கொஞ்சம் தூங்கிட்டேன் அதான் போன எடுக்கல . நான் என் பிரண்ட் விட்டுல தான் இருக்கேன்

    சங்கரி,  சரி நீ எங்க இருந்தாலும் சரி இன்னும் ஒரு மணி நேரத்துல இங்க இருக்கனும் என்றவள் அவள் பதிலை எதிர் பார்க்காமல் போனை வைத்து விட்டாள்.

      அவள் வைத்த உடன் போனையே  வெறித்து பார்த்தவள் தன்னை சமாளித்து கொண்டு தன் உணர்வுகளை கட்டு படுத்தியவள் எழுந்து குளித்து விட்டு ஒரு  சுடிதார் அணிந்து கொண்டு தன் தோழியிடம் கூறி விட்டு அங்கே சென்றாள்.


     அவள் வரவை எதிர் பார்த்து காத்திருந்த மூவரும் அவள் வந்த உடனே முதல் ஆளாக  சரவணன் அவளிடம் மன்னிப்பு கேட்டான் . அவள் அவனை தடுத்து விட்டு தான் இங்கு இருந்தாள் இடம் பத்தாது என்று தான் சென்றதாகவும் அவர்கள் மீது கோபம் இல்லையென சொல்லி விட்டு அமைதியாக சென்று அமர்ந்தாள் . அவர்களும் அவளுடனே உட்கார  மாயா கிச்சன்  உள்ளே இருந்து அவளுக்கு டீ போட்டு எடுத்து வந்து கொடுத்தாள் .

   அவளை பார்த்து சிரித்து கொண்டே வாங்கியவள் அவளிடம் நலம் விசாரித்து விட்டு சங்கரியிடம் வீட்டில் சொல்லியாச்சா என்று விசாரித்தாள்

     சங்கரியும் அவர்கள் பேசியதை கூற சரி என்றவள் தன் மனதில் வேறு கணக்கு போட்டு கொண்டு சரி கிளம்புவோம் என்றாள்.

      அதன் பின் எல்லோரிடம் சிறிது நேரம் பேசியவள் தனக்கு ஹாஸ்பிடல் நேரமாகிறது  என சொல்லி கிளம்பினாள் . அவளுக்கு தானே தெரியும் இதற்க்கு மேல் இருந்தால் அழுது விடுவோம் என்று நினைத்தவள் கிளம்ப,  அவளை நிறுத்திய சுரேஷ் அவளிடம் சென்று பாப்பா நீ வேலை முடிஞ்ச உடனே இங்க வா என்றான்.

     சந்தியா,  இல்ல ணா இங்க மூனு ரூம் தான் இருக்கு நான் இருந்தா மாமாவுக்கு சங்கடமா இருக்கும் அதனால கிளம்புற வரை அங்கேயே இருக்கேன் என்றாள் .  அவனுக்கு தெரியுமே சரவணனின் காதல் அதனால் அவனும் சரி என்றான்.

    உடனே அங்கே இருந்து வேகமாக கிளம்பியவள் தான் இருக்கும் வீட்டிற்க்கு சென்றவள் ஒரு மூச்சு அழுது தீர்த்தவள் ஒரு சில முடிவுகளை எடுத்து விட்டு ஹாஸ்பிடல் கிளம்பி சென்றாள்.


         மூன்று மாதம் கழித்து


         என்ன தான் சரவணன் மாயா கழுத்தில் தாலி கட்டி இருந்தாலும் அவளை விட்டு விலகியே இருந்தான் . அவனால் அவன் குட்டிமாவை மறக்க முடியவில்லை அதனால் ஆனால் மாயாவை  தன் கண்ணுக்குள் வைத்து பார்த்து கொண்டான் . அவளும் அவனை புரிந்து கொண்டு  அவனை தொந்தரவு பண்ணாமல் இருந்தால் .


        என்ன பிரச்சனை இருந்தாலும்  யாருக்கும் தெரியாமல் சந்தியா பார்த்து கொண்டதால் அவளின் கஷ்டம் தெரியாமல் இருந்ததால் சங்கரி சுரேஷ் இருவரும் தங்கள் காதல் உலகில் சஞ்சரித்தனர்.

     எல்லாரும் ஊருக்கு கிளம்ப இருந்த சமயத்தில் சந்தியா தங்கி இருந்த தோழி வீட்டில் இருந்து சங்கரிக்கு போன் வர அவள் எடுத்து பேசியவள் அந்த பக்கம் சொல்லிய செய்தியில் அதிர்ந்து நின்றவள் அதன் பின் எல்லோரையும் அழைத்து கொண்டு அங்கே செல்ல அங்கு சந்தியா தங்கி இருந்த அறை வெறும் அறையாக தான் இருந்தது. அவள்  எழுதிய கடிதம் மட்டுமே கையில் பட்டது.

    அதில்

    
          என் அன்புள்ளவர்களுக்கு 


        என்னால் இந்தியா வர முடியாது காரணம் இங்கே வேற நாட்டில் எனக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைத்துள்ளது அது மட்டுமில்ல எனக்கு மனதிற்க்கு பிடித்த வாழ்க்கையும் இங்கு காத்திருக்கிறது என்னால் அங்கு வந்து ஒரு சாதாரண வாழ்க்கை வாழ முடியாது அதனால் நான் எனக்கு பிடித்தவருடன் பிடித்த வாழ்க்கை வாழ போகிறேன் எதாவது சூழ்நிலையில் உங்களை சந்தித்தால் பார்ப்போம் .


        பாய் 

     உங்கள் சந்தியா.


     என்று அந்த கடிதம் முடித்து இருந்து அதை அவர்களால் நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை காரணம் இந்த மூன்று மாதமாக அவள் யாரையோ காதலிப்பதாகவும் அவன் அவளை தன்னுடன் வேறு ஹாஸ்பிட்டலில் வேலை பார்க்க அமைப்பதாகவும் அவள் ஏற்கனவே சொல்லி இருந்த காரணத்தால் அதை நம்ப வேண்டிய கட்டாயத்தில் தான் அவர்கள் இருந்தனர்.

      சந்தியாவும் அதையே விரும்பினாள் தன்னால் இவர்களுடம் ஊருக்கு சென்று தன் உயிராக நேசித்த தன்னவன் இன்னொரு பெண்ணுடன் வாழ்வதையும் தன் குடும்பம் தனக்கு ஏற்பாடு செய்யும் கல்யாணத்தில் இருந்து தப்பிப்பதற்காகவும் இந்த மூன்று மாத காலமாக அவர்கள் நால்வரிடமும் தான் ஒருவனை விரும்புவதாகவும் அவன் தன்னை இங்கே இருக்க சொல்வதாகவும் கூறியவள் , தாங்கள் ஒன்றாக தங்கி இருந்த வீட்டிற்க்கு அடிக்கடி செல்ல முடியாத காரணத்தால் தான் அவனுடன் ஊர் சுற்ற செல்வதாக கூறி விட்டு தன் வீட்டிலேயே இருந்தாள் . அவர்களும்  அவள் தன் காதலனுடன் தான் இருப்பதாக நம்பியவர்கள் புதுக் காதலன் கிடைத்த உடன் தங்களை மறந்து விட்டாள்  என்று அவள் மீது தேவையில்லாத கோபத்தை வளர்த்து கொண்டனர்.  அதுவும் தனக்கு நல்லது என்று நினைத்தவள் அவர்களை சமாதானப்படுத்த நினைக்கவில்லை .

       சரவணனும் அவள் சந்தோசமாக இருந்தாள் போதும் என்று நினைத்தவன் ஊருக்கு செல்லும் போது உடன் அழைத்து செல்ல வேண்டும் என நினைத்தான் ஆனால் அதற்க்கு முன்பாக அவள் இப்படி கடிதம் எழுதி வைத்து விட்டு சென்றதால் மன வருத்தத்துடன் அங்கிருந்து தங்கள் சொந்த ஊருக்கு வந்தனர் .

       வீட்டிற்க்கு வந்த பின் பெற்றவர்களிடம் சந்தியா செய்ததை சொல்ல அவர்களும் தங்களை நம்பாமல் தங்களை பார்க்காமல் சென்ற ஒரு மகளே தங்களுக்கு தேவையில்லை என கூறி விட்டு புதிதாக வந்த மாயாவை தாங்கினர் .

     இதை தானே சந்தியாவும் விரும்பினால்  தான் வெறும் வேலை விஷயமாக மட்டும் செல்வதாக கூறினாள் தான் திரும்ப வருவேன் என்று எதிர் பார்ப்பார்கள் என்று தான் அவள் தன் காதலனுடன் போவதாக எழுதி இருந்தாள்.  கடைசி வரை தன்னவன் நினைப்புடன் தன்னுடைய முதல் காதல் அதுவே தன் கடைசி காதல் என நினைத்து மருத்துவத்தை சேவையாக செய்து கொண்டு தன் வாழ்க்கையை வாழ விரும்பியவள் அந்த நாட்டில் இருக்க பிடிக்காமல் அங்கே வேலையை விட்டு விட்டு இந்தியாவிற்கே வந்து விட்டாள் அங்கு  பழைய பள்ளி தோழி மூலமாக கேரளாவில் ஒரு தனியார் மருத்துவ மனையில் வேலைக்கு சேர்ந்தவள் அங்கு தனியாக ஒரு வீடு எடுத்து தங்கி குழந்தைகளுக்கு மருத்துவம் அளித்து அந்த குழந்தைகளின் முகத்தை பார்த்து தன் மீதி வாழ்க்கையை வாழ்ந்து வந்தாள்.


       இரண்டு வருடம் கழித்து


          கேரளாவில் அந்த புகழ் பெற்ற தனியார் மருத்துவமனையில் தியா என்றாள் தெரியாதவர்கள் யாரும் இல்லை .  அந்த அளவிற்கு குழந்தைகளுக்கு மருத்துவம் பார்ப்பதில் கைராசியான டாக்டர் என பெயர் வாங்கி இருந்தாள் .   குழந்தைகளுக்கும் பிடித்த டாக்டராகவும் இருந்தாள். அன்று தமிழ் நாட்டில் இருந்து ஒரு குழந்தைக்கு ஹார்ட் ப்ராப்ளம் என்று இங்கு வந்து சேர்த்து இருந்தனர் . நாளை காலையில் தான் அந்த சிறுவனுக்கு ஆப்ரேஷன் அதனால் அதற்க்கு முன்பு அவனை செக்கப் செய்வதற்காக  அந்த சிறுவன் இருக்கும் அறைக்குள் சந்தியா சென்றாள் .

       அந்த சிறுவனிடம் சென்றவள் க்கு தன்னையும் அறியாமல் அவனிடம் ஒரு ஒட்டுதல் ஏற்பட ரொம்ப நாட்கள் பிறகு அவன் மனமும் மகிழ்ச்சியாக இருந்தது .   அதே மனநிலையில் அந்த சிறுவனுடன் பேசி கொண்டே அவனை செக்கப் செய்தாள் .   அதில் அவன் உடல் ஆப்ரேஷன் செய்ய ஏற்றது போல தான் இருந்தது.   அதை அறிக்கையாக எடுத்தவள் அவனுக்கு மருந்து குடுத்து தூங்க வைத்து விட்டு வெளியே வர ஒரு ஆண் மட்டும் நின்றான் அவனிடம் சென்றவள் காலையில் ஆப்ரேஷன் என்று சொன்னவள் சீப் டாக்டரிடம் சொல்லி விட்டு தன் வேலையை கவனிக்க சென்றாள் .  அப்போது தான் நியாபகம் வர அந்த சிறுவன் பெயரை யோசித்தாள் .  சபரீஷ்  நல்ல பெயர் இந்த சிறிய வயதில் இப்படி ஒரு நோய் வந்து இருக்க வேண்டாம் என நினைத்தவள் அடுத்து தன் வேலையை கவனித்து விட்டு வீட்டிற்க்கு சென்றாள் .


    காலையில்  ஆப்ரேஷன் நல்லபடியாக முடிய வெளியே வந்து அந்த சிறுவனின் தந்தையை கண்டவள் அங்கேயே மயங்கி விழுந்து விட  வேகமாக அவள் அருகில் வந்த சரவணன் அவளை பிடித்தான் .  உடன் இருந்த டாக்டர்கள் அவளை செக் செய்ய அதிர்ச்சியில் வந்த மயக்கம் என்றனர் உடனே அவளை கையில் ஏந்தியவன்  அந்த டாக்டர் சொன்ன அறையில் படுக்க வைத்து விட்டு அவள் மாமா என்று தன்னை அறிமுகப் படுத்தி கொண்டு அவளை பத்தி விசாரிக்க அவர்களும் ஏற்கனவே அவள் போனில் இவனின் படத்தை பார்த்ததால் அவள் இங்கு வந்தது முதல் எல்லாம் விவரமாக சொன்னார்கள் .  அவர்கள் சொன்னதை கேட்டவன் குழம்பி போய் தன் நண்பனை தன் மகனின் அறைக்கு வெளியே நிற்க்க வைத்து விட்டு அவள் இருக்கும் அறைக்கு சென்றான்  அங்கு அவள் கட்டிலில் மயக்கத்தில் படுத்து இருக்க அவள் கழுத்தில் அவன் அணிவித்த செயின் வெளியே தொங்கி கொண்டிருந்தது . அதை பார்த்த வனுக்கு சிறிது புரிய அவள் அருகில் சென்று பார்த்தான் அன்று பார்த்து சந்தியா லோ நெக் வைத்த டாப் போட்டு வந்திருந்தாள்  ஆனால் அழகாக துப்பட்டா குத்தி இருந்ததால் அப்படி ஒன்றும் தப்பாக தெரியவில்லை ஆனால் இவன் தூக்கி வந்த காரணத்தால் துப்பட்டா விலகி அவள் நெஞ்சில் குத்தி இருந்த அவன் பெயர் தெரிய அப்படியே அவள் அருகில் அமர்ந்து விட்டான்.


      சிறிது நேரத்தில் கண் முழித்தவள் முதலில் கண்டது தன் எதிரே உட்காந்து தன்னை பார்த்து கொண்டிருந்த தன்னவனை தான் கனவு என்று நினைத்தவள் வேகமாக சென்று அணைத்து கொண்டாள் அதன் பின்பு அவன் உண்மை என்று தெரிய அவனை விட்டு விலக உடனே அவளை இழுத்தவன் அவள் கையை தன் தலையில் வைத்து நடந்த விசயத்தை என் மேல சத்தியமா நீ சொல்ற என்றான். 


     அவளும் வேறு வழியின்றி அவனை காதலித்தது முதல் எல்லாம் சொல்ல அதை கேட்டவன் தன்னையே நொந்து கொண்டான் .   உடனே அவனை சமாளிக்க நினைத்த சந்தியா


     சந்தியா,  மாமா மாயா எங்க இது அப்போ உன் பையனா என்றான் . உடனே அவன் இல்லை என மறுத்து இது மருமகன் என்றான் .  உடனே சந்தோசமான சந்தியா அப்ப சுரேஷ் சங்கரி மகனா என்றாள்.  ஆமா என்றவன் அவர்கள் சங்கரி அவனை நினைத்து அழுது கொண்டே இருந்ததால் ஆப்ரேஷன் பண்ணும் போது கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளதாக கூறினான் . அவளும் சரி என்றவள் மாயாவை பற்றி கேட்க
பெரு மூச்சு விட்டவன் சொல்ல ஆரம்பித்தான்.

    சரவணா,  மாயா வயித்துல இருந்த குழந்தை என்னோடது கிடையாது அவ நம்ம சொத்து மேல ஆசை பட்டு அப்படி நடந்து இருக்குறா நான் இங்க ஊருக்கு வந்த பின்னாடி உன்ன மனசுல வெச்சுட்டு அவ கூட வாழ முடியல அதனால நான் விலகியே இருந்தேன் அப்ப தான் அவள பத்தி தெரிஞ்சது . 


          மாயா  அவளோட பிரண்டு கிட்ட பேசுனது எல்லாம் கேட்டுட்டேன் . அவ நான் பெரிய பணக்காரன் அப்படின்னு நினைச்சு நான்  குடிக்குற ஜூஸ் ல போதை மருந்து கலந்து குடுத்து என் கூட வாழ ஆசை பட்டு இருக்கா ஆனா நான் அந்த போதையிலும் உன்ன தவிர யாரையும் தொட மாட்டேன் அப்பிடின்னு மயக்கம் போட்டதால அவ பாய் பிரண்ட் கூட வாழ்ந்து பிள்ளை உண்டாகி அத என் பிள்ளைனு சொல்லிறுக்கா .இங்க வந்த அப்புறம் நம்ம எளிமையான வாழ்க்கையை பார்த்துட்டு நானும் விலகி இருக்குறத நினைச்சிட்டு ரொம்ப கஷ்டப்பட்டு இருக்க அத தான் அவ பிரண்டு கிட்ட பேசிட்டு இருந்தா நான் அத கேட்டுட்டு ஒன்னுமே சொல்லாம அவ பாய் பிரண்ட் ட கண்டு பிடிச்சு அவன விட்டே எல்லா உண்மையும் அவ வாயாலேயே சொல்ல வச்சு சட்டப்படி விவாகரத்து வாங்கிட்டு பிரிஞ்சிட்டோம் .


       இப்போ மட்டுமில்ல எப்பவுமே என் முதல் காதல் நீ தான் கடைசி காதலும் நீ தான் நீ என்ன சொல்லுற நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா என்றான் அவளும் மிக மகிழ்ச்சியாக சரி என்க

       உடனே தன் குடும்பத்தார் அனைவரையும் அழைத்து நடந்த எல்லா விஷயத்தையும் ஒன்னு விடாம சொல்லி எல்லாரையும் சம்மதிக்க வைத்துவ இருவரும் கல்யாணம் பண்ணிட்டாங்க.

       இனிமே அவர்கள் வாழ்வு நன்றாக இருக்க  நாமும் அவர்களை வாழ்த்தி விட்டு செல்வோம்


                    ……..நன்றி……….



           என்ன தான் உறவினர்களா இருந்தலும் அவர்கள் காதல்ல வந்த பெரிய தடையை உடைச்சு அவங்களோட முதல் காதல்ல ஜெயிச்சு இப்ப சந்தோசமா அவங்க வாழ்றாங்க .   

      என்ன தான் நம்ம வாழ்க்கையில எத்தன பேர் வந்தாலும் நம்ம மனசுல முதல் தடவ பதிஞ்ச காதல் நாம இந்த உலகத்துல இருக்குற வரைக்கும் நம்ம மனசுல எதாவது ஒரு ஓரத்துல இருக்க தான் செய்யும் அது தான் உண்மை.



உங்கள் அன்புடன் நான்

          ரியா ராம்.

            

You may also like

Leave a Comment

error: Content is protected !!