எழுதியவர்: சுஶ்ரீ
“நீ டாக்டருக்கு படிடா அப்பதான் எனக்கு வேற டாக்டர் கிட்ட போற அவசியம் வராது”,மரியம்பாட்டி, லூர்து 12 வது பாஸ் பண்ணினவுடனே சொன்னா.
ஜேம்ஸுக்கு தச்சுத் தொழில் ,அவரோட அம்மாதான் மரியம்.அவரோட அவரோட பையன் லூர்து.
தூத்துக்குடி தூவிபுரம் 4வது தெருவுல மெர்சி கேக்ஸ் கடைக்கு எதுத்தாப்பல இருக்குதில்ல நீலப்பெயின்ட் அடிச்ச வீடு, அதுலதான் இருக்காக ஜேம்ஸு குடும்பம்.அவரோட அப்பாரும் மரவேலைசெய்தவருதான்.’லேடி ஆஃப் ஸ்நோ பேசிலிகா’என புகழ்பெற்ற ‘பனிமலை அன்னை சர்ச்சுக்கு’ தேக்கு மரச் சப்பரம் செஞ்சு கொடுத்து பெயர் வாங்கியவர்.
அவருக்கு அப்பறம் ஜேம்ஸு அந்தத் தொழிலுக்கு வந்தார்.ஆனா ஜேம்ஸ் பையனை படிக்கவச்சார்.மரம் அறுக்கற மெஷின்ல கை மாட்டி வேலை செய்ய முடியலை.பையனை நம்பி இப்பகுடும்பம்.
டாக்டருக்கு படிடானு சொன்ன தன் பாட்டிக்கு தன் கையால சவப்பெட்டி செஞ்சான் கண் அழுககை உழைத்தது.முத வேலை பாட்டிக்கு அழகான சவப் பெட்டி.
முற்றும்.
📍அரூபி தளத்தில் உங்கள் படைப்பை பதிவிட இத்திரியை கிளிக் செய்யவும்/