வரலாற்று சிறப்புமிக்க பழங்களில் எலுமிச்சையும் ஒன்றாகும்.
எலி கடித்து மிச்சம் வைத்த பழம் என்பதால் இதற்கு எலுமிச்சை என்ற பெயர் வந்திருக்கலாம் என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.
இதை ஆங்கிலத்தில் சிட்ரஸ் லெமன் என்றழைப்பர். ஆசியாவை தாயகமாகக் கொண்ட இப்பழம் தாவர வகையைச் சார்ந்ததாகும்.
இப்பழம் சமையலுக்கும் வைத்தியங்களுக்கும் காலம் காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மஞ்சள் வர்ணத்தில் காணப்படும் இப்பழம் புளிப்பு சுவை மிக்கதாகும்.
வைட்டமின் சி கொண்ட இப்பழம் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டதாகும்.
எலுமிச்சை சாரின் வீரியம் அதீதமானதாகும். ஆகவே, அதை அப்படியே பயன்படுத்தக் கூடாது.
நீர் அல்லது தேனோடு கலந்து தான் பயன்படுத்திட வேண்டும்.
அதேபோல், அதை வெட்டியதும் பயன்படுத்தி விட வேண்டும்.
மன அழுத்தம், உயிர் ரத்த அழுத்தம், தலைசுற்றல், வயிற்றுப் வலி, உப்புசம் , நெஞ்சு எரிச்சல் கண் வலி, சிறுநீர் அடைப்பு போன்ற உபாதைகளை இப்பழச்சாறு நீக்கும்.
இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து குடித்தால் நல்ல தூக்கம் வரும், மனமும் அமைதி பெறும்.
ரத்தத்தை சுத்திகரிப்பு செய்யும்.
உடலில் இருந்து நச்சுப் பொருள்களையும் பாக்டீரியாக்களையும் வெளியேற்றும்.
மூட்டு வலிக்கு நிவாரணம் கொடுக்கும்.
விஷக்கிருமிகளின் தாக்கத்தை நீக்க உதவும்.
சில துளிகள் எலுமிச்சைச்சாறை நீர் கலக்காமல் வாயில் சொட்டவிட்டால், நாக்கின் சுவை எறும்புகள் தூண்டப்படும்.
சாறை முடியில் தடவி சிறிது நேரம் ஊறிய பின் தலை குளித்தால் பொடுகு தொல்லையை நீங்கும், பித்தம் குறையும், உடல் சூடு அடங்கும்.
தேள் கொட்டிய இடத்தில் எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி தேய்க்க விஷம் இறங்கும்.
சிறிதளவு எலுமிச்சை இலைகளை அரைத்து சாறு பிழிந்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து நீரில் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும்.
எலுமிச்சை பழத்தின் விதைகளை நீரில் போட்டு காய்ச்சி அதிலிருந்து எழும் ஆவியை முகத்தில் படும்படி பிடிக்க நீர் பிணிசம் தீரும்.
சாறுடன் நீர் கலந்து சிட்டிகை உப்பு போட்டு தொண்டையில் படுமாறு கொப்பளிக்க தொண்டை மற்றும் வாய்ப்புண் ஆறும்.
பித்த நீர் சரியான அளவில் சுரக்க இச்சாறு வழி செய்கிறது. பித்தப்பையில் ஏற்படும் கற்களை கூட கரைக்க உதவுகிறது.
கல்லீரலை பலப்படுத்தி மண்ணீரலையும் சுத்தமாக வைத்துக் கொள்கிறது.
சருமப் புண்களுக்கு ஆன்ட்டி செப்டிக்காக பயன்படுகிறது.
இச்சாறை முகத்தில் தடவ, கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்கள் மறையும்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் இளஞ்சூடான நீரில் எலுமிச்சை சாறு ஒரு டீஸ்பூன் தேனுடன் பருகி வர உடல் எடை குறையும்.
previous post
1 comment
Sis anti hero ud…