அகம் புறம் : வயிற்றில் புண்ணா? அப்ப இது உங்களுக்கு தான்

by Admin 4
7 views

அல்சர் பாதிப்பா அலட்சியம் வேண்டாம்! –
உணவின் மூலம் தடுக்கலாம்.

‘‘டீ, காபி வேண்டாம்… ஸாரி, எனக்கு அல்சர்”
இந்த டயலாக் அடிக்கடி கேட்போம்.
வாழ்க்கைமுறை மாற்றத்தால், நாம்
விலைக்கு வாங்கிய நோய்களில் இதுவும்
ஒன்று. உணவு செரிப்பதற்காக வயிற்றில்
அமிலங்கள் சுரக்கும். இந்த அமிலங்களால்
வயிற்றுக்கு எந்தப் பாதிப்புகளும்
ஏற்படாதவாறு, புரதங்களால் உருவாக்கப்பட்ட
படிமங்களும் (Layers) இருக்கும். இது
இரைப்பையைப் பாதுகாக்கும் வகையில்
அமைந்திருக்கும். குடல், இரைப்பை,
சிறுகுடல், வாய் போன்ற இடங்களில் புண்கள்
ஏற்பட்டு, இந்த படிமங்களைப்
பாதிக்கும்போதுதான் பிரச்னை ஏற்படுகிறது.

அல்சர் அறிகுறிகள்!

அல்சர் புண்களில் 30-40 சதவிகிதம்
அறிகுறிகளே தெரியாது. அடிக்கடி பசி,
சாப்பிட்ட பிறகும் பசி, வயிற்று வலி,
முதுகு வலி, வயிற்று எரிச்சல், நெஞ்சு
எரிச்சல், சாப்பிட்டதும் வாந்தி போன்ற
பிரச்னைகள் இருக்கும். பால், தண்ணீர், பிஸ்கட்
போன்ற உணவுகளைச் சாப்பிட்டதும், வயிற்று
வலி குறைந்தது போன்ற உணர்வைத் தந்தால்,
அது முதல் கட்ட அல்சர். சிறிது உணவைச்
சாப்பிட்ட பிறகும் வயிற்று வலி தொடர்ந்தால்,
அல்சர் தீவிரமாகி உள்ளது என்பதைத் தெரிந்து
கொள்ளலாம்.

அல்சர் வரக் காரணங்கள்!

சமச்சீர் உணவு சாப்பிடாமல் இருப்பது, அதிக
மசாலா, எண்ணெய் உணவுகள், உணவுப்
பழக்கத்தில் மாற்றம், காலை உணவத் தவிர்த்தல்,
ஹெலிகோபேக்டர் பைலோரி (Helicobacter pylori)
என்ற கிருமித் தொற்று, மனப் பிரச்னையால்
அமிலங்கள் சுரப்பதில் மாற்றங்கள், வீரியமுள்ள
வலி மாத்திரைகள், ஸ்டீராய்டு மருந்துகளை
உட்கொள்வது, மது மற்றும் புகைப்பழக்கமும்
அல்சரை ஏற்படுத்தும். 70 சதவிகித உணவு
மற்றும் வாழ்வியல் தவறுகளால்தான் அல்சர்
ஏற்படுகிறது.
ரிஸ்க் அல்சர்
வயிற்றுப் புண்ணுக்கு நீண்ட காலம் சிகிச்சை
எடுக்காமல் இருந்தால், அது லிப்போமா
(lymphoma) என்ற புற்றுநோயாக மாற
வாய்ப்புகள் அதிகம். என்றோ ஒரு நாளைக்கு
அதிகளவில் மது அருந்த, அவர்களுக்கும் அல்சர்
வரும். வாந்தி, வாயு பிரச்னைகளைக்
கொண்டுவந்து, அல்சர் நோயைத்
தீவிரமாக்கிவிடும். நீண்ட காலம் அல்சர்
இருந்தால், அந்தப் புண்களின் வடுக்களும்
இருக்கும். இது குடலில் ஓட்டை விழும்
அளவுக்குக் கொண்டுவந்து, குடல் அடைப்பை
ஏற்படுத்தலாம். ரத்தக் குழாய்களை அரித்து,
பெரிய பிரச்னைகளை ஏற்படுத்தலாம். இதற்கான
காரணங்களை முறையாகக் கண்டறிந்து, தகுந்த
சிகிச்சைகளை மேற்கொண்டு, அல்சரை
குணமாக்கிவிடலாம்.

உணவின் மூலம் அல்சரைத் தடுக்கலாம்!

நம் தென் இந்திய உணவுகள் ‘நல்ல உணவு’
பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்த உணவைச்
சாப்பிட்டாலே, அல்சர் வருவதை வெகுவாகக்
குறைக்கலாம். ஆவியில் வேகவைக்கப்பட்ட
உணவுகளுக்கு முதல் இடம் தரலாம். எண்ணெய்,
உப்பு, மசாலா, காரம் இவற்றைக் குறைந்த
அளவில் எடுத்துக்கொள்ளலாம். தேன்,
ப்ரக்கோலி, முட்டைகோஸ், வெங்காயம்,
பூண்டு, பால் பொருட்கள், வாழை, அதிக
நார்சத்துள்ள உணவுகள் மிகவும் நல்லது.
கோலா பானங்கள், சோடா, ஊறுகாய்,
பதப்படுத்தப்பட்ட உணவுகள், சிட்ரஸ் வகை ஆயத்த
பழச்சாறுகள், டீ, காபி தவிர்க்கலாம்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!