எழுதியவர்: இந்துமதி
சூரியன் வரும் முன் ஆரஞ்சு வண்ணத்தில் வானம் தோன்றும் இளங்காலைப் பொழுது. அதையெல்லாம் ரசிக்க வழியின்றி வயிற்றுப் பிழைப்புக்காக வேலைக்கு ஓட வேண்டிய அவசியம் சரசுவுக்கு.
அவள் புருஷன் ஆட்டோ ஓட்டி பிழைச்சாலும் இந்த பாழாப்போன குடியினால் ஒரு பைசா பிரயோசனம் இல்லை அவனால்.
சிவா கண்ணா எழுந்திரு. டப்பாவில் இட்லி வைச்சு இருக்கேன் . சாப்பிட்டு ஸ்கூல் போ ராஜா. அம்மா வேலைக்கு கிளம்பறேன்.
நான் போகலை. டிரவுசர் கிழிஞ்சு போய் எல்லோரும் கிண்டல் பண்றாங்க. புதுசு வாங்கி தந்தா தான் போவேன்.
இப்போ தைச்சு வைக்கிறேன். சம்பளம் வந்ததும் வாங்கித் தரேன்டா செல்லம்.
ஏம்மா நம்ப வீட்டில் மட்டும் இப்படி ? அப்பா சம்பாதிச்சும் வீட்டுக்கு காசு தராமல் குடிப்பதால் தானே. அப்பாவைக் கெடுக்கும் கடையை மூடிட்டா அவர் காசும் வருமே.
அதை அரசாங்கமே நடத்துது பா. நாம ஏழைகள் அதை எதிர்த்து வாழ முடியுமா?
📍அரூபி தளத்தில் உங்கள் படைப்பை பதிவிட இத்திரியை கிளிக் செய்யவும்.