வாசகர் படைப்பு: தோட்டா

by Nirmal
48 views

எழுதியவர்: கௌரி சங்கர்

டேய் பழனி – முனீஸ்வரன் கோவில் மூன்றாவது தெரு – 14ம் நம்பர் வீடு. காம்பவுண்டு சுவற்றையொட்டி ஒரு தென்னை மரம் இருக்கும். நீ இப்ப எங்கே இருக்கே ?
அந்த வீட்டுக்கு எதிரில் உள்ள ஒரு பூங்காவுல ஒரு மாமரத்து  மேல உக்காத்திருக்கேன்.
யாராவது பார்த்தங்களா ?
இல்லேண்ணே.
சரி – மணி 8.30. குறிவைச்சிருக்கிற குமரேசன் வர்ற நேரம். அவரே தான் கார் ஓட்டுவாரு.
தோட்டா லோடு பண்ணி இருக்குண்ணே. கண்டிப்பா பிஸ்டல் வட்டத்துக்குள்ளாற தான் வந்தாகணும். அண்ணே, படியில் இறங்குறாரு;
குமரேசன் இறங்கவும், சர்ரென்று ஒரு லாரி வீட்டு முன்பு செல்லவும் சரியாக இருந்தது. பிஸ்டல் தோட்டாவை கக்கியது.
“அண்ணே – மோசம் போயிட்டோம்ணே” – நெஞ்சில் இருந்து ரத்தம் வழிந்து ஓட, கீழே விழுந்த பழனி உயிரை விட்டிருந்தான்.
வெளியேறிய தோட்டா லாரி சைடு பிரேம்ல பட்டு, ரெவெர்ஸ்ல திரும்பி, பழனியின் நெஞ்சிலே குடிபுகுந்தது அந்த தோட்டாவுக்கு மட்டும் தான் தெரியும்.

முற்றும்.

📍அரூபி தளத்தில் உங்கள் படைப்பை பதிவிட இத்திரியை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!