எழுதியவர்: கல்யாண் ஆனந்த்
வீட்டில் தனியாகத் தூங்கிக் கொண்டிருந்த குமரன் தீடிரென்று எழுந்தான். மணி இரவு பண்ணிரெண்டு. வீட்டில் வேறு யாரோ இருப்பது போல் ஒரு உணர்வு. ஜன்னல் அருகில் தலை விரித்த படி ஒரு உருவம். காற்றில் அதன் கூந்தல் பறந்து கொண்டிருந்தது. ஒரு கணம் மூச்சு நின்றுவிட்டது. உடல் வேர்த்தது. கை கால்கள் நடுக்கத்துடன் மெல்ல எழுந்து லைட்டை ஆன் செய்தான்.
நிம்மதி பெருமூச்சு. ஜன்னல் ஓரத்தில் வீடு துடைப்பதற்கான மாப் இருந்தது. தன்னை நினைத்துச் சிரித்துக்கொண்டே நிம்மதியாகப் படுத்து உறங்கினான் குமரன்.
காலை அவன் மனைவியிடம் இருந்து அழைப்பு வந்தது. அவள் ஊரிலிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருப்பதாகவும் வீட்டிற்குத் தேவையான சாமான்களை வாங்கி வைக்குமாறு கூறினாள். கடைசியாக வீட்டில் துடைப்பதற்கு மாப் இல்லை அதையும் வாங்கி வைக்குமாறு அவள் சொல்லிவிட்டு தொலைப்பேசியை வைத்தாள். அதிர்ந்து போய் அமர்ந்திருந்தான் குமரன்.
முற்றும்.
📍அரூபி தளத்தில் உங்கள் படைப்பை பதிவிட இத்திரியை கிளிக் செய்யவும்.