எழுதியவர்: ஏ.ஜி.முகம்மது தௌபீக்
மளிகை கடை மகேந்திரன் உழைப்பில் படு சுறுசுறுப்பாளி. கஞ்சத்தனத்திற்க்கும் பஞ்சமில்லாதவன். “கட்”டாகிருந்த கடை எலக்ட்ரிக் தராசு ஒயரை சரி செய்ய ஐம்பது ரூபாய் கேட்டதால், தானே சரி செய்து கொண்டிருந்தான்.
சில வினாடிகளில் மொபைல் ஒலித்தது.
ஹலோ..! என்றான்.
ஏங்க.! நான் தான் சுமதி பேசுறேன். நம்ம பொண்ணு.. பேச தயங்கினாள் அவன் மனைவி.
என்னாச்சு.? இன்னைக்கு என்னத்த இழுத்து வச்சிருக்காள். கடுப்பாக கேட்டான்.
இல்லைங்க,தண்ணீர் குடத்தை தூக்கி வரும் போது வழுக்கி விழுந்து கால்ல அடிபட்டுருச்சு.
ஆஸ்பத்திரி போயிட்டு இருக்கோம் என்றாள் பயத்தோடு.
தாய்,பிள்ளைக்கு இதே பொழப்பா போச்சு. அறிவில்ல.? எத்தனை தடவை சொல்லிருக்கேன், எந்த வேலை செய்தாலும் கவனமா இருக்கணும்னு.வார்த்தைகளால் பொளந்து கட்டினான்.
கோபப்படாதீங்க. “வேணும்னு விழல.விதி.நடந்துடுச்சு” என்றாள்.
என்னடி விதி.மதியில்ல.அடிக்கடி சொல்றேன். ஏன் அதை புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்க.?
நீங்க எக்கேடு கெட்டு போங்க. என்னை தொந்தர பண்ணாதீங்க. மொபைலை துண்டித்து.
பணியை ஆரம்பித்ததும் மின்சாரம் தாக்கி. சுவற்றோரம் விழ ஆஹா.! ஸ்விட்ச் ஆப் செய்ய மதி தவறிட்டோமேனு உணர்ந்தவன் ரத்தம் வழிய மயங்கினான்.
முற்றும்.
அரூபி தளத்தில் உங்கள் படைப்பை பதிவிட இத்திரியை கிளிக் செய்யவும்.