எழுதியவர்: ரஞ்சன் ரனுஜா
ஐயோ அம்மா!! வலிக்குது அம்மா,
“கொஞ்சம் பொறுத்துக்க தாயி”
என பிரசவ வலியால் துடிதுடித்துக் கொண்டிருந்த கண்ணமாவுக்கு கொஞ்சம் தைரியமூட்டியது, இருளாயி பாட்டியின் வார்த்தை. கண்ணமாவுக்கு இதுதான் முதல் பிரசவம்.
தனக்கு பிரசவம் நல்லமுறையில் நடந்து குழந்தையை பெற்றெடுத்தால், ஊர் காவல் தெய்வமான கருப்பசாமி கோவிலில் பூசை செய்வதாக நேர்த்தி வைத்துக் கொண்டாள், கண்ணம்மா
குழந்தையும் எந்த குறையும் இல்லாமல் சுகப்பிரசவமாக பிறந்தது.
“என்னங்க, கருப்புசாமி கோவிலுக்கு போய் பூச ஒன்னு குடுப்பமா? என்று கண்ணம்மா தனது கணவன் சின்னசாமியிடம் கேட்டது, பக்கத்து அறையில் படுத்திருந்த வள்ளி கிழவியின் செவிகளை தொட்டது.
“ ஏய் ஒனக்கு அறிவு இல்லயா? புள்ள பொறந்தா தீட்டு, சாமி பொறுக்காது” என பாட்டியின் வசை சொற்கள் கண்ணம்மாவின் மனதில் முனை சீவிய அம்புகளாக குத்தியது.
என்ன? குழந்தை பிறந்தால் தீட்டு, பூப்படைந்தால் தீட்டு, மாதவிடாய் தீட்டு, மனிதன் இறந்தால் தீட்டு, ஏன், எதனால், இது தீட்டு? என்று புரியாத அந்த மங்கைக்கு தீட்டு ஓர் விடையறியா புதிரானது.
முற்றும்.
📍அரூபி தளத்தில் உங்கள் படைப்பை பதிவிட இத்திரியை கிளிக் செய்யவும்.