தேவையான பொருட்கள்
வாழைப்பூ: ஆய்ந்து சுத்தம் செய்து நறுக்கியது 1 & 1/2 கப்
கடலை பருப்பு: 3/4 கப்
உளுத்தம் பருப்பு: 2 மேஜைக்கரண்டி
அரிசி: 2 மேஜைக்கரண்டி
வெங்காயம் நறுக்கியது: 1/4 கப்
பெருங்காயம்: 1/8 தேக்கரண்டி
ஜீரகம்: 1 தேக்கரண்டி
சிகப்பு மிளகாய்: 4
கருவேப்பிலை: 1
கொத்தமல்லி நறுக்கியது: 3 மேஜைக்கரண்டி (தேவைப்பட்டால்)
உப்பு: தேவைக்கேற்ப
எண்ணெய்: தேவைக்கேற்ப
செய்முறை
- கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் அரிசியை ஒன்றாக ஊற வைத்துக்கொள்ளவும். 3 மணி நேரம் கழித்து, தண்ணீரை வடித்துவிடவும்.
- முதலில் மிக்சியில் மிளகாய், ஜீரகம், உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு பொடி செய்யவும்.
- பிறகு, ஊறவைத்த பருப்பை தண்ணீர் சேர்க்காமல் சேர்த்து, இரண்டு பாகமாக பிரித்து அரைக்கவும்.