ஒரு ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று, யானை முகத்துடனும், மனித உடலோடும் கூடிய அசுரன் கஜமுகாசுரனை, விநாயகர் வதம் செய்து
தேவர்களை மீட்டார்.
அதுவே, விநாயகர் சதுர்த்தி ஆனது.
அன்று முதல் இந்த நாள் விநாயகர் சதுர்த்தி தினமாக கருதப்பட்டு கொண்டாடப்படுகிறது.
அனலாசுரன் என்பவன் அனைவரையும் சாம்பலாக்கும் திறன் பெற்றதையடுத்து, தேவர்கள், விநாயகர் அவனை பிடித்து விழுங்கியதால் ஆனைமுகக் கடவுளின் வயிறும் அனலாய் எரிந்தது.
அப்போது, முனிவர்கள் சிலர், விநாயகரின் உடல் குளிர்ச்சிக்காக அருகம்புல் சாற்றினர்.
அதுமுதல், அருகம்புல் விநாயகருக்கு மிகவும் பிடித்தமானதாயிற்று.
ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தியில் வருகிற தினமே விநாயகரின் அவதார தினமாக கருதப்பட்டு, அவருக்கு பிடித்த அவல், பொரி, கடலை, கொழுக்கட்டை, கரும்பு போன்ற நிவேதனங்கள் படைக்கப்படுகின்றது.
மேலும், விநாயகருக்கு உகந்த அப்பம், இளநீர், எள்ளுருண்டை, வெள்ளரி, விளாம்பழம், நாவற்பழம் போன்றவையும் படைப்பது நல்லது.
விநாயகர் வழிபாட்டின்போது, விநாயகர் அகவல், விநாயகர் கவசம், காரிய சித்தி மாலை போன்ற பாடல்களைப் பாடி வழிபடுவது சிறப்பாகும்.
இதில், எடுத்த செயலை வெற்றி பெறச்செய்யும் காரிய சித்தி மாலை படித்திட வேண்டியது அனைத்தும் எளிதில் நிறைவேறும்.
விநாயக பெருமான் 32 வடிவில் இருந்தாலும், சில குறிப்பிட்ட இடங்களில் வித்தியாசமான பெயர்களில் வணங்கப்படுகிறார்.
கங்கைகொண்ட சோழபுரம் சிவன் கோயிலில் உள்ள விநாயகர் கணக்கு விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
கோயில் கணக்கு வழக்கு குறித்த மன்னனின் கேள்விக்காக, அமைச்சருக்கு விநாயகர் கணக்கு விபரம் தெரிவித்தார்.
விநாயகரை மஞ்சளில் பிடித்து வழிபடும்போது, அனைத்து
வசதிகளும் கிடைக்கும்.
உப்பு – எதிரிகள் தொல்லை நீங்கும்.
குங்குமம் – சகல தோஷம் விலகும்.
வெள்ளெருக்கு – தீவினைகள் நீங்கும்.
சந்தனம் – குழந்தைப்பேறு கிடைக்கும்.
பசுவின் சாணம் தடைகள் நீங்கி சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.
வெண்ணெய் கடன் தொல்லை நீங்கும்.
வாழைப்பழம் – வம்சம் விருத்தியடையும்.
விநாயகரை வணங்கி வழிபடும்போது முன் நெற்றியில் 3 முறை கொட்டி, 2 கைகளாலும், காதுகளை பிடித்துக்கொண்டு 5 முறை தோப்புக்கரணம் போடவேண்டும்.
அகத்திய முனிவர் தனது தவறுக்காக விநாயகர் முன்பு தோப்புக்கரணம் போட்டதையடுத்து இந்த பழக்கம் ஏற்பட்டது.
திண்டிவனத்தில் இருந்து செஞ்சி செல்லும் வழியில் உள்ள தீவனூரில் இருக்கும் விநாயகர், பொய் சொல்பவர்களை தண்டிப்பவர் என்பதால் ‘பொய்யாமொழி விநாயகர்’ என்று அழைக்கப்படுகிறார்.
விழுது விடாத அதிசய ஆலமரத்தின் அடியில் இருந்து அருள்புரியும் இந்த விநாயகர் திருமண தோஷம் நீக்குபவராகவும், குழந்தை வரம் தருபவராகவும் இருக்கிறார்.
கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயன் கோயிலில் இருக்கும் ஒரு தூணில் பெண் வடிவ விநாயகியின் சிற்பம் காணப்படுகிறது.
இதேபோல், வடிவீஸ்வரம், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், சிதம்பரம் நடராஜர் கோயில், திருச்சுழி, பவானி, வாசுதேவநல்லூர் போன்ற இடங்களிலும் உள்ளது.
ஆகவே, எக்காரியத்தை தொடங்கும் முன் விநாயகரை வணங்கி எத்தடங்கலும் இன்றி காரியம் வெற்றி அடையும் என்ற நம்பிக்கைக் கொள்ளுங்கள்.