எழுத்தாளர்: சுப்புலட்சுமி சந்திரமௌலி
கங்காவிற்கும், மோகனுக்கும் திருமணமாகி ஹரி என்ற பையன் இருந்தான். அவன் கேட்டதெல்லாம் மோகன் வாங்கிக் கொடுப்பான். ஹரி பெரியவனாகி வேலைக்கு சென்றான். சிறுவயதிலிருந்தே தன் அப்பாவிடம் சாக்ஸபோன் வாங்கி தரச் சொல்லி கேட்பான், உனக்கு அந்த வயது வரும் பொழுது அப்பா வாங்கி தருவேன் என்பான் மோகன். ஹரி முதல் நாள் வேலைக்கு செல்லும் பொழுது, புது பைக் வாங்கி கொடுத்தான். மாலை அலுவலகத்திலிருந்து திரும்பும் போது சாக்ஸபோனை கொடுத்து அவனை ஆச்சரியப்பட வைக்க வேண்டும் என்று வாங்கி வைத்தான். ஆனால் ஹரி அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் வழியில், லாரி மோதி ஸ்பாட்டிலேயே உயிர் பிரிந்தது. அவன் படத்தின் அருகே சாக்ஸபோனை வைத்து தினமும் கண்ணீர் விடுகிறான் மோகன்.
முற்றும்.
