10 வரி போட்டிக் கதை: கால மாற்றம்

by admin 1
78 views

மாறன் குடும்பத்தினர், மாறனுக்கு திருமணத்திற்கு பெண் பார்க்க புறப்பட்டனர். மணப்பெண் வானதி தன்னை மிகவும் எளிமையாக அலங்கரித்துக் கொண்டாள். 

மாறன் அப்பா தனது குடும்பத்தாரிடம் பேசினார்.இன்னைக்கு பையன்களுக்கு பொண்ணு கிடைக்கிறதே  குதிரை கொம்பா இருக்கு. நம்ம குடும்பத்தில்  பெண்கள் யாராவது ஏதாவது கேட்டு பெண் வீட்டாரை மன வருத்தம் அடைய செய்து விடாதீங்க.இந்த இடமாவது அவனுக்கு அமைய வேண்டும் என்று ஆதங்கப்பட்டார்.

ஒரு காலத்தில் ஆம்பள பிள்ளை என்றாலே வரதட்சணைதான் பெரிய வருமானம் என்று கர்வத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால் இன்று பலருக்கும் அந்த வார்த்தைக்கான அர்த்தமே தெரியாது.

ஒரு காலத்தில் டைனோசர் என்ற மிருகம் பூதாகரமாக அனைவரையும் பயமுறுத்தி வாழ்ந்து வந்ததாம். பல்லாண்டு காலத்திற்குப் பின் அது முற்றிலும் அழிந்து போய் தொல்பொருள் ஆராய்ச்சி ஆகிவிட்டது. 

அது போலதான் வரதட்சணை என்ற பூதம் இப்பொழுது அழிந்து விட்டது. அதற்குக் காரணம் பெண் கல்விதான் அவர்களின் வேலை வாய்ப்பு தான். எனவே யாரும் மறந்து கூட எதுவும் கேட்டு விடாதீர்கள் என்று மிகவும் கண்டிப்பாக கூறினார்.

வானதிக்கும் மாறனுக்கும் பரஸ்பரம் ஒத்து போக இனிதே திருமணம் நடந்தேறியது.

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/14143-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!