எழுத்தாளர்: நா.பா.மீரா
இண்டர்காலேஜ் காம்படீஷனுக்காக …. தேடித் தேடி தரவுகள் சேகரித்து … போட்டி விதிப்படி குறுந்தகட்டில் சேமித்துச் சமர்ப்பிதாள் அதுல்யா .
போட்டி தினத்தன்று …
ஒரே தவிப்பு அதுல்யாவுக்கு …. நல்லாப் பண்ணிடுவோமா …. அந்த மஹிமா வேற சூப்பராச் செய்வாளே …. மீதிப்பேரக் கூடச் சமாளிச்சிடலாம் …
ஒரு வழியாக மனத்தை ஒருமுகப்படுத்தி ….தன் முறை வருகையில் அதுல்யா ஆரம்பிக்கவும் … மின்சாரம் நிற்கவும் சரியாக இருந்தது.துளியும் பதறாமல் சிறப்பாகச் செய்ய நடுவர்களின் முகத்தில் திருப்தி .
கடைசியாக…மஹிமா… பதற்றத்தில் உளறிக் கொட்டினாள். காரணம் —-மின்சாரத்தடை மட்டுமல்ல …. அதுல்யாவுக்குத் தெரியாமல் அவள் தகட்டில் இருந்த பதிவுகளை அழித்தும் …அசத்திட்டாளே.. கட்டாயம் பரிசு அவளுக்குத்தான் என்ற பொருமலும், பொறாமையும்தான்.
முற்றும்.