எழுத்தாளர்: வெ. முத்துராமகிருஷ்ணன்
இரண்டாம் வகுப்பு படிக்கும் மகள் கேட்ட ஹேர் பேண்டை வாங்கிக் கொண்ட நந்தினி அருகில் இருக்கும் மார்க்கெட்டில் கீரை எப்போதும் கீரை வாங்கும் பாட்டியை நோக்கி நடந்து சென்றாள்.
கிரை பிரஷ்ஷாக இருக்கவே தேவையான கீரையை குனிந்து எடுத்த பொது அவள் பையில் அவள் மகளுக்காக வாங்கிய ஹேர்பேண்ட் கீரையின் மேலே விழ பாட்டியின் அருகே உட்கார்ந்து இருந்த அவளுடைய பேத்தி அதை ஆசையுடன் எடுத்துப் பார்த்தாள்.
கீரைக்கான காசை கொடுத்தவுடன் பாட்டி தன் பேத்தியை பார்த்து “அந்த அம்மாவிடம் கொடுத்துவிடு” என்று சொல்ல அந்த சின்ன குழந்தை மாட்டேன் என்று தலையை ஆட்டியது.
இதை பார்த்து நந்தினிக்கு பாவமாக இருந்தது.
பாட்டி அந்த குழந்தையின் கையில் இருந்து பிடுங்கி ஹேர் பாண்டே நந்தினியிடம் கொடுக்க அந்த குழந்தை முகம் வாடி போனதை பார்த்தவுடன் நந்தினி பரவாயில்லை குழந்தை தானே எடுத்துக் கொள்” என்று அவளுடைய தலையில் ஹேர்பேண்ட் பொருத்த அந்த குழந்தையை முகத்தில் வந்த சிரிப்பை பார்த்தவுடன் இது ஒரு கள்ளம் கபடம் இல்லாத மழலையின் சிரிப்பு என்று ரசித்துக் கொண்டே அந்த குழந்தையை முத்தமிட்டாள்.
“தேங்க்ஸ் அக்கா” என்று குழந்தை சொன்னதை ரசித்துக்கொண்டே நந்தினி வீட்டை நோக்கி நடந்தாள்.
முற்றும்.
