எழுத்தாளர்: நா.பா.மீரா
கிராமத்திலிருந்து லீவுக்கு வந்திருந்த பெரியப்பா பெண் வைஷாலியுடன் தன் மொபைலில் பிளே ஸ்டேஷன் டவுன்லோடு செய்து … விளையாடினான் வைபவ் . முன்பெல்லாம் அவள் வரும்போது இருவரும் விளையாடும் கேரம், செஸ் , லுடோ எல்லாம் அந்த அறையின் ஒரு மூலையில் ஏக்கமாக அவர்கள் மொபைலில் விளையாடுவதையே பார்த்துக் கொண்டிருந்தன .
வைஷாலிக்கும் அதே நிலைதான் …. அவற்றை நோக்கி மன்னிப்பு கேட்கும் பாவனையிலான பார்வையைச் செலுத்தி…. ஏக்கப்பெருமூச்சு விட்டாள் .
சை … சதி பண்ணுது இந்த மொபைல் ….. ஆன் ஆகவே மாட்டேங்குது ….
கடைல கேட்டா ..ரிப்பேர் பண்ண ஒரு வாரம் ஆகும்கிறான் … வைபவ் சலிப்போடு சொல்ல…அங்கிருந்த விளையாட்டுப் பொருட்களுக்கெல்லாம் ஒரே குஷி.. வைஷாலிக்கும்தான்.
முற்றும்.