எழுத்தாளர்: அருள்மொழி மணவாளன்
தென் மாவட்டத்தில் இருந்து வேலைக்காக சென்னைக்கு வந்த மாலா, பெண்கள் விடுதியில் தனது அறையில் சோர்வாக படுத்திருந்தாள்.
மாலாவை பார்த்துக் கொண்டே, தன் இரவு வேலையை முடித்து விட்டு உள்ளே வந்தார் கமலா. கமலா ஒரு பெரிய மருத்துவ மனையில் செவிலியாக வேலை பார்க்கிறார்.
“என்ன மாலா வேலைக்கு போகலையா?”
“இல்லை அக்கா இன்னைக்கு எனக்கு தீட்டு. அதிகமா படுது. கடையில் வேற நின்று கொண்டே இருக்கனும். அடிக்கடி போய் பேடு மாத்த முடியாது. அதான் லீவு போட்டுட்டேன்”
“முடியலைனா ரெஸ்ட் எடு. இப்ப பேடுக்கு பதிலா கப் மாதிரி வந்திருக்கு. எங்க ஹாஸ்பிடலுக்கு வரும் பெண்களுக்கு எங்க டாக்டர் அதைத்தான் பரிந்துரைக்கிறாங்க”
“அப்படியா அக்கா. அப்ப எனக்கும் வாங்கி தாங்க”
“நீ ஒரு நாள் என் கூட ஹாஸ்பிடலுக்கு வா. டாக்டர் கிட்ட கலந்து பேசு. உன் ரத்த போக்கு அளவு எப்படினு தெரிந்து அதற்கு தகுந்த மாதிரி சொல்லுவாங்க. வாங்கிக்கலாம்”
“இன்னைக்கே நீங்க வேலைக்கு போகும் போது வரேன் அக்கா. பயனுள்ளதாக இருந்தால் வாங்கலாம் அல்லவா? ” என்றாள் மாலா.
மாறிவரும் உலகத்தின் போக்கிற்கு நாமும் மாறி தானே ஆகவேண்டும்.
முற்றும்.