எழுத்தாளர்: இரா.நா. வேல்விழி
பால்வடியும் முகத்தில் சாக்லேட் வழிந்தது. நாக்கைச் சுழற்றி
சுழற்றிப் பார்த்தும் மூக்கில் ஒட்டியிருந்த சாக்லேட்டை சுவைக்க
முடியவில்லை பாப்பாவிற்கு.
வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த
அத்தையின் மேலே மலரின் பார்வையிருந்தது. அத்தைக்
குழந்தையைத் தூக்கவுமில்லை துடைத்து விடவுமில்லை.
அதற்குள் கன்னம், கையென்று அப்பிக் கொண்டிருந்தது பாப்பா. இதைப்பார்த்த மலருக்கு வருந்துவதை தவிர வேறென்ன செய்ய முடியும்.
பாப்பாவின் முகத்தைக் கழுவி விடுவதை விட அத்தையின் மனசை
மாற்றவே முடிவு செய்தாள்.
இனிப்பு சிலரது வாழ்க்கையையும்
கசப்பாக்கி விடுகிறதே நொந்து கொண்டால் கடவுளை.
முற்றும்.