எழுத்தாளர்: விஜயா சுப்ரமணியம்
கல்யாணம் முடிந்து மருமகள் வீட்டில் இருந்து சீர்கள் வந்து
இறங்கி இருந்தது.
பெரிய..குடம் பித்தளை விளககுகள் எவர்சில்வர் பாத்திரங்கள் பெரிய ஸ்டீல் டிரம் வந்ததை பிரித்து பார்த்துக் கொண்டு இருந்த நாத்தனார் புது காஸ்அடுப்பை பார்த்தவுடன் ஒரே சந்தோஷம்.
நாலு பர்னர் உள்ளது அடுத்த பார்ஸலை பிரித்தாள் அதனுள் ஒரு நான்ஸ்டிக் பேன் கைபிடியுடன் இருந்தது.
தோசைகல்லு மாதிரி இருக்கே ஆனால் வித்தியாசமாக இருக்கு
யாரும் வருவதற்குள்…தோசை ஊத்தி சாப்பிடணும்கிற ஆசையில் முதலில்விறகு அடுப்பை மூட்டினாள் நாத்தனார் ரம்யா.
ஒரே சந்தோஷம் முதல் தோசை நமக்குத்தான். விறகு…அடுப்பை சின்ன தீயில் வைத்து தோசை மாவை ஊற்றினாள்.
கல் சூடே ஆகவில்லை. திரும்பி போட பார்த்தாள் கல் சூடாக இல்லாததால் மாவு ஈசிக் கொண்டது.
மரதிருப்பியால் திருப்பாமல் இரும்பு சட்டுவத்தால்
நன்றாக திருப்பினாள இன்னும் நன்றாக ஈசிக் கண்டது.
சரி அடுப்புத்தீயை பெரிசாக்கினாள் எண்ணை வேறு எடுத்து கத்தினாள். திகுவென்று எரிய ஆரம்பித்தது எண்ணை நெருப்பு நான்ஸ்டிக் பேனும் கூடஎரிய ஆரம்பித்தது.
“ஐயோ நெருப்பு” என்று கத்திக் கொணீடு வெளியில் ஓடினாள். எல்லோரும் ஓடி வந்து நெருப்பை அணைத்தனர்.
நான் ஸ்டிக் பேன் அப்படியே உருகி விட்டது.
நான்ஸ்டிக் பேனையே முதலில் உருக்கிய சிங்கப்பெண் இவள் தான்.
முற்றும்.