எழுத்தாளர்: ஷா.காதர் கனி
விவசாயம் செழிப்பான கிராமத்திலிருந்து வேலை தேடி முதன்முறையாக சென்னைக்கு
வந்த ராஜா தனது நண்பனுடன் இரவு டிபன் சாப்பிட சென்றிருந்தான். வித்தியாசமான
உணவு வேண்டும் என்று நண்பனிடம் கேட்டிருந்ததால் பிரைட் ரைஸ் வாங்கி
கொடுத்தான். சாப்பிட்டவுடன் வழக்கம்போல் இரவில் சாப்பிடும் வாழைப்பழம்
வேண்டும் என்று ராஜா கேட்டான்.
அருகில் இருக்கும் பெட்டி கடைக்கு சென்று சீப்புகளாக வெட்டி வைக்கப்பட்டிருந்த
வாழைப்பழத்தில் ஒன்றை எடுத்தான். “இது என்னடா பளபளன்னு புதுசா இருக்கு”
என்று கேட்ட ராஜாவுக்கு இதுதான் மோரிஸ் வாழைப்பழம் பெரும்பாலும்
சாப்பிடாமல் இருப்பதே நல்லது என்று கூறினான். “நம்ம ஊர்ல இந்த ரகம்
இல்லையேடா” என்றவனுக்கு இது கார்ப்பரேட்டுகளின் ரகம் என்று கூறி மோரிஸ்
இன் தீமைகளை கூகுள் செய்து காட்டினான். பிறகு எதற்கு எனக்கு வாங்கி கொடுத்த
நண்பா என்று சடைவுடன் கேட்ட ராஜா அன்று இரவு வாழைப்பழத்திலும் கூட
இப்படி எல்லாம் செய்வார்களா என்ற விரக்தியுடன் தனது எதிர்கால நகரத்து
வாழ்க்கையை நினைத்து சற்று கலங்கிப் போனான்.
முற்றும்.