10 வரி போட்டிக் கதை: பல் பாக்ஸ்

by admin 2
70 views

“அம்மா , அம்மா “ என்று அழைத்தப்படி அழுதுக் கொண்டே ஓடி வந்தான் மணி.

“என்னடா , மணி வாயெல்லாம் ரத்தம் “ இது என்ன கையில “ என்று அதிர்ச்சியடைந்த படி கேட்டாள் ஹேமா

“அம்மா விளையாடும் போது பால் பட்டு பல் விழுந்திடுச்சு “”இந்தாங்க பல்லு “ என்றபடி “சீக்கிரம் ஒரு பாக்ஸ் குடும்மா பல் போட்டு மூடி வைக்கணும் ,அப்பதான் எனக்கு முளைக்கும் “என்றான் மணி .

“டேய் முதல்ல போய் வாயை கழுவலாம் வா “ முதல்ல
பல்ல தூக்கி போடு “என்றால் ஹேமா .

“இல்லம்மா பல்ல தூக்கி போட்டா எப்படி எனக்கு பல்ல வளரும் “என்றால் மணி .

“அது வந்துடா “என்றவுடன் மணி ஹேமாவை பார்த்து முறைத்தப்படி
“உனக்கு எனக்கு பல் இல்லேன்னு கவலையில்லை “என்றான் மணி

“ சரி அதவிடு, உனக்கு எதுக்கு பாக்ஸ் , யாரு சொன்னா அத பாக்ஸ்ல போட்டா வளரும் “என்று என்றால் ஹேமா .

“பாட்டி தாத்தாவோட பல்ல பாக்ஸ்ல போட்டுத்தான் நிறைய பல்லு வைச்சிருக்காங்க, நைட்டு தாத்தா டிபன்பாகஸ்ல தண்ணிரில வைப்பாரு நான் பார்திருக்கேன் “என்றான் மணி

“ஹேமாவிற்கு சிரித்தப்படி “இல்லடா நீ சின்ன பையன் வளர வளர , பல் வந்துடும் தாத்தா வயதானவர் அவருக்கு பல் விழுந்தா முளைக்காது ,அது மட்டுமல்ல அவரு டாக்டர்க்கிட்ட சொல்ல பல் செட் செஞ்சு வச்சிருக்காரு அது முளைச்சி வளர “சரியா என்றால் ஹேமா .

நம்மாத மணிக்கு you tube ல் வீடியோ போட்டு காண்பித்த பின்பே மணி. சாமாதானம் ஆனான்.

 நன்றி    

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/16643-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!