10 வரி போட்டிக் கதை: பாவம் அவர்கள்

by admin 2
68 views

புதிதாக சோபா செட் வந்து இறங்கியதும் அந்தப் பழைய பென்ச்
போன்ற நீளமான நாற்காலி ஹாலின் அழகை கெடுப்பதாகப் பட்டது
திவ்யாவிற்கு. 
“ஏங்க, இதை  பழைய சாமான் வாங்குற கடையில கொண்டு போய்
போடுங்க” என்றாள்.
தியாகு பதில் ஏதும் சொல்லாமல் நாற்காலியை எடுத்துக் கொண்டு
கிளம்பினான். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து அவளை
அழைத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு சென்றான்.
அங்கே நிழலான ஓர் இடத்தில் அந்த நாற்காலி போடப்பட்டிருந்தது.
‘’இங்கே ஏன் இதை கொண்டு வந்து போட்ருக்கேன்னு பாக்குறியா?
16 வீடுகள் இருக்கிற இந்த அப்பார்ட்மெண்ட்ல வேலை செய்யற
பணிப்பெண்கள் பாத்திரம் தேய்ச்சு, வீடு துடைச்சி, துணி துவைச்சு
கஷ்டப்படுறாங்க. ஒரு அஞ்சு நிமிஷம் உட்கார்ந்து ரெஸ்ட் எடுக்க
அவங்களுக்கு எங்கேயும் நாற்காலி கிடையாது. அப்பார்ட்மெண்ட்
செகரட்டரி கிட்ட பேசி இந்த நாற்காலி பணிப்பெண்களுக்கு மட்டும்
தான்னு சொல்லி பர்மிஷன் வாங்கிட்டேன். மொட்டை மாடியில
துணி காயப் போட்டுட்டு, அவங்க இதுல உட்கார்ந்து கொஞ்ச நேரம்
ரெஸ்ட் எடுத்துக்கட்டும்.’’ என்றவனை பெருமிதமாக பார்த்தாள்
திவ்யா.

 முற்றும். 

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/17130-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!