எழுத்தாளர்: ருக்மணி வெங்கட்ராமன்
மணியும் அவன் மனைவி ராணியும் மனநல மருத்துவர் அறையில் அமர்ந்து அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தனர்.
“நீங்க படிச்சவங்க. இப்படி நடந்து கொள்ளலாமா? உங்க இருவரின் சண்டை, உங்க பையனைப் பாதித்து இருக்கிறது. அந்த கோபத்தில் பிளே ஸ்டேஷனில் கேமில் முரட்டுத் தனமாக வெட்டு குத்து என்று விளையாடி உள்ளான். உங்கள் மேல் உள்ள பாசத்தை இழக்க விரும்பாமல் கோபத்தை கேமில் காட்டியுள்ளான்.”
“ஆமாம் டாக்டர். கேமில் இருந்து வெளியே வந்தாலும் மனதிற்குள்ளேயே விளையாடி தன்னிலை இழந்து விட்டான். எப்படியாவது அவனை சரியாக்கிடுங்க”என்று கெஞ்சினான்.
“மருந்து மாத்திரை மட்டும் அவனைக் குணமாக்காது. உங்கள் இருவரின் அன்பு, சண்டை இல்லாமல் நீங்கள் வாழும் காதல் வாழ்க்கை அவனைப் பழையபடி குணமாக்கும்.”
விட்டுக் கொடுத்து வாழும் வாழ்க்கையைப் புரிந்துக் கொண்ட, மணி – ராணி தம்பதியினர் மகன் குணமடையும் நாளை எதிர் நோக்கி காத்திருந்தனர்.
முற்றும்.