10 வரி போட்டிக் கதை: வலி

by admin 1
45 views

எழுத்தாளர்: மிதிலா மகாதேவ் 

  • அன்று காலையி்ல் எழும் போதே ராதாவுக்கு புரிந்து விட்டது தனக்கு இன்று மாதவிடாய் நாள் என்று… பெண்கள் இதை எல்லாம் பார்க்க முடியாதே அதுவும் நடுத்தர வர்க்கம் குழந்தைகளுக்காக உழைக்க ஓட வேணும்.
  • காலை சமையல் செய்தவள் அதை அவசர அவசரமாக கணவன்,தனக்கு மகன்,மகளுக்கு டிபன் பாக்ஸில் வைத்தவள்… காலை காபியை கூட தியாகம் செய்து பிள்ளைகளை எழுப்ப ஓடினாள். 
  • மகன் ஆறாம் வகுப்பு மகள் இரண்டாம் வகுப்பு இருவரையும் எழுப்பி குளிக்க வைத்து… யூனிபார்ம் அணிவித்து சாப்பாடு ஊட்டி கொண்டு இருக்கும் போது பிரபு ஆபிஸ் கிளம்ப ரெடியாகி வந்தான். 
  • ராதா ஒரு தனியார் கம்பெனியில் டைப்பிஸ்ட் பிரபு ஒரு கட்டுமான கம்பெனியில் கிளார்க்.. அவசரம் அவசரமாக பிள்ளைகளுக்கு உணவை ஊட்டி விட்டு தானும் வாயில் அள்ளி போட்டாள் உணவை. 
  • சாப்பிட்டு முடிய பாத்திரங்களை சமையலறை சிங்கில் போட்டு விட்டு கதவை பூட்டி விட்டு… கிளம்ப ரெடியானார்கள் அதற்கே அவளுக்கு முதல் நாள் என்பதால் வலியில் பாதி உயிர் போனது. 
  • பிரபு போகும் வழியில் பிள்ளைகளை விட்டு போவான் வரும் போது இருவருமே ஸ்கூல் வேனில் வருவார்கள் ராதா பஸ் தான்…பிள்ளைகளை கணவன் கூட அனுப்பி விட்டு பஸ் பிடிக்க அவள் ஓடினாள். 
  • காலை வேளை கேட்கவா வேணும் கூட்டம் பிதுங்கி வழிந்தது… ஸ்கூட்டி கூட இப்போ வாங்க முடியாத நிலை வீட்டின் மேலே வாங்கிய கடனை கட்டி கொண்டு இருப்பதால். 
  • ஒருவாறாக ஆபிஸ்க்கு வந்து சேர அவள் லாவண்டர் நிற புடவையில் சிவப்பு திட்டுக்கள் பட்டு இருந்தது… அதை அவள் கவனிக்கவே இல்லை அவள் கூட வேலை பார்க்கும் சுமதி அதை சுட்டி காட்ட. 
  • ராதா கண்கள் கலங்கியது இப்படியேவா பஸ் பயணம் செய்து இறங்கி வந்தேன்… என்ன பிழைப்பு என நினைக்க சுமதி இதற்கு ஒரு இலகுவான யோசனை சொன்னாள் அது ராதாவுக்கு கொஞ்சம் சரியாக பட்டது. 
  • மறுநாள் சானட்டரி நாப்கினை விட்டு புதிதாக சந்தைக்கு வந்த மாதவிடாய் கோப்பை ( Menstrual cup) பாவிக்க ஆரம்பித்தாள்… செலவும் இல்லை மற்றவர்களுக்கு காட்சி பொருளாகும் வலியும் இல்லை. 

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/12351-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!