எழுத்தாளர்: ஆர் சத்திய நாராயணன்
1. என் அப்பா திடீரென இறந்து விட்டார்.
2. நான் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தேன்.
3. நான் என் அம்மாவுக்கு ஒரே பிள்ளை.
4. நான் வேலைக்கு போகிறேன் எனறேன்.
5. இல்லை சொல்லி விட்டார்.
6. அப்பா அம்மாவிற்கு வாங்கி கொடுத்த தையல் இயந்திரம் இப்போது உதவி செய்தது.
7. அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் ஆர்டர் பெற்றார்.
8. இரவு பகல் பாராது கடுமையாக உழைத்தார்.
9. எங்கள் இருவருக்கும் சோறு போட்டது இந்த தையல் இயந்திரம்…!
10. ஆயுத பூஜைக்கு இதற்கு கட்டாயம் பூஜை போட வேண்டும்…!!
முற்றும்.