எழுத்தாளர்: அனுஷாடேவிட்
“அடியேய் என்னத்த நான்ஸ்டிக் பேனு தலையில இருக்க ஈருனு சொல்ற. இங்கன பாரு இதுலநல்லாவே சமைக்க வரல”
“மாம் இது இப்படி தான் இருக்கும்”
“என்னத்த இருக்கும் ஒன்னும் இல்ல. ஒரு பாத்திரத்தில் சமைச்சா அதுல சமைக்கிறது ஒட்டனும்.
அதை கடைசியா வழிச்சி சாப்பிடுற ருசி இதுல கிடைக்குமா?”
“அச்சோ மாம் இது Pan இதுல குக் பண்ணா ஒட்டாது. அதுதான் அதோட ஸ்பெஷாலிட்டி.
நீதானே பாத்திரம் துலக்க கஷ்டமா இருக்கு சாப்பாடு ஒட்டினதை தேய்க்க முடிலனு சொன்ன”
“ஆமாடி சொன்னேன்தான். ஆனால் இது என்ன சமைச்சாலும் ஸ்வீட் மாதிரி ஒட்டாமல்ல வருது”
அன்னையை முறைத்தவள் “மாம் இந்த Vessel இப்படி தான். உன் வேலையை ஈஸியாக்கனும்னு தான் வாங்குனேன்” என்றவள் தாயின் கைகளை ஆதரவாகப் பற்றினாள்.
“அது இல்லடி…”
“நீ ஒன்னும் சொல்ல வேணாம். ஏன் இப்படி பேசுரனு எனக்கு தெரியும். கறி(காய்கறி கூட்டு) காலி ஆகிடுச்சினா சாதத்தை அதுல பிரட்டி போட்டு நீ சாப்பிடுவ இப்ப அது முடியாதுனு வருத்தபடுர.
இப்பதான் நான் வேலைக்கு போறேன்ல்ல நம்ம தேவை எல்லாம் நான் பாத்துகிறேன்மா. நீ ஒர்ரி பண்ணிக்காத”
“என் ராஜாத்தி” என்று கண்களை ஒற்றி எடுத்தாள் தாயவள்.
“என் செல்ல மாம். அப்பா இருந்தவரைக்கும் ஒட்டி திரிஞ்ச உறவெல்லாம் இப்ப ஒட்டாத மாதிரி போகவும் நீ வேதனை படுவது எனக்கு தெரியாது நினைச்சியா?
உனக்கு நான் இருக்கேன்மா”
இருவரும் அணைத்தபடி தந்தையின் மாலையிட்ட சட்டத்தை கண்ணீருடன் பார்த்திருந்தனர்.
முற்றும்.