எழுத்தாளர்: கோபாலகிருஷ்ணன் பால்ராஜ்
ஐந்து வயதில் அப்பாவின் கைபிடித்து அந்த செவக்காட்டுக் கடலைத்தோட்டத்தில் கால்வைத்தால் கேசம்மாள். பருவம் வந்த மகளை கட்டிக்கொடுத்து, சீதனமாக அவள் உழைத்துத் தேய்ந்த அந்த செவக்காட்டை தந்தார் சடையன். பிள்ளைகளுக்கும் குறைவில்லை, கடலை விளைச்சலுக்கும் குறைவில்லை. ஆத்தா “ஏரோபிளேயான்” பறக்குது, மத்தியானமாச்சு கெளம்புறம் என கூலியாட்கள் கெளம்ப கேசம்மாவும் வீடு திரும்புவாள். ஐந்து வயதில் நிலத்தில் இறங்கியவளுக்கு அறுபது வயது, நித்தம் அவளின் கடிகாரம் அவள் தலைக்கு வெகு உயரத்தில் பறக்கும் “ஏரோபிளேயான்”. மகன்கள் டி.எஸ்.பி, என்ஜினீயர், அரசியல் பெரும்புள்ளி என வளர்ந்துவிட செல்வத்திற்குக் குறைவில்லை. இறப்பதற்குள் நாள்தோறும் தன் தோட்டத்தை கடக்கும் அந்த “ஏரோபிளேயானில்” பொறந்த மதுரையில் இருந்து மெட்ராஸ் வரை ஒரு முறை சென்றுவிடவேண்டும் என்பதே அவள் இலட்சியம். தாயின் நெடுநாள் கனவை நெனவாக்க விமானத்தில் அழைத்துச்சென்றார் முதல் மகன், விமானம் மதுரையில் இருந்து கிளம்பி வானின் உயரத்தை அடைந்தது. மெட்ராஸில் விமானம் கீழிறங்கும்போது, வாழ்நாள் ஆசை நிறைவேறிய கேசம்மாவின் மனம் வானில் மேல்நோக்கிப் பறந்தது.
முற்றும்.
10 வரி கதை போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றி பெறுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
