10 வரி போட்டிக் கதை: சிதறல்கள் 

by admin 1
96 views

ஒரு வார லீவை தோழி ஸ்ரீதேவியுடன் கழிக்க வந்திருந்தாள் ஸ்ரீநிதி .

மாடுலர் கிச்சன் … அதிநவீனமான இன்டீரியர் என எந்தப் பக்கம் திரும்பினாலும் ஆடம்பரம் . அதிலும் அந்த மூன்று பர்னர்கள் கொண்ட கிளாஸ் டாப் அடுப்பு .. ஸ்ரீநிதியின் கண்களிலேயே நிற்க….

கணவன் வெங்கட்டிடம் … என்னங்க .. ஸ்ரீதேவி வீடு வீடியோ பார்த்தீங்களா ? கிச்சன்ல அந்த அடுப்பு சூப்பரா இருக்கில்ல …நாமளும் ….

மேலும் பேசுவதற்குள் …. கிச்சனிலிருந்து டமார்… டமார்… என்று சத்தம் . ஓடிச் சென்று பார்த்தால்…. அழகான கிளாஸ் டாப் அடுப்பு சுக்கு நூறாகி இருந்தது. 

நல்ல வேளை …. கிச்சனில் அப்பொழுது யாரும் இல்லை.

 ஏய் … ஸ்ரீநிதி லைன்ல இருக்கியா … எதிர்முனையில் தனியாகப் பேசிக் கொண்டிருந்தான் வெங்கட்.

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/14143-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!