10 வரி போட்டிக் கதை: நான் ஸ்டிக்

by admin 1
115 views

“வாங்க அத்தை “,” மாமா எப்படி இருக்காங்க அத்தை “ என்று
ஊரிலிருந்து வந்திருந்த மாமியாரை வரவேற்றாள் ஹேமா.
“ நல்லாயிருக்கே மா? “வேலையெல்லாம் எப்படி இருக்கு? “
என்றார் மாமியார் சுந்தரி .
ம்ம் “ சாப்பிடுகிறியீர்களா அத்தை “என்று கிச்சனுக்கு அழைத்து சென்று டைனிங் டேபிளில் அமர வைத்தாள் ஹேமா .
கிச்சனை நோட்டம் விட்டப்படி “ இது என்னம்மா கருப்பு தட்டு மாதிரி
இருக்க “ “ ஆமா எல்லா பாத்திரமும் கருப்பு இருக்கு ,” ஏ ஆத்தா இப்படி
இருக்கு “ என்று ஆச்சரியமாக கேட்டார் சுந்தரி .
“ அதுவா அத்தை, இது நான் ஸ்டிக் தவா இது நான் ஸ்டிக் பேன் “ என்று
ஒவ்வொரு பொருளாக எடுத்துக்காட்டினாள் ஹேமா .
“நானு ஸ்டிக் ன்னா என்ன ஆத்தா சொல்ற ஒன்னு புரியல , த்தா “என்றார் சுந்தரி “ அது வந்து அத்த , எதுவும் இதுல ஒட்டாது , தோசை யெல்லாம் கல்ல ஒட்டாம அப்படியே வரும் அத்தை “என்றால் ஹேமா .
“ இருங்க அத்த உங்களுக்கு நா தோசை ஊத்தி தரேன் “என்று
தோசை ஊற்றிக் கொடுத்தாள் ஹேமா .
ஆச்சரியத்துடன் பார்த்த சுந்தரிருசியில்லாத தோசையை
அரை குறையாக சாப்பிட்டு முடித்தார் சுந்தரி .
“ சரிம்மா களைப்பா இருக்கு , நா படுக்கிறேன் “கூறிவிட்டு படுக்கறை நோக்கி நடந்து ரூமுக்குள் நுழைந்ததும கதவை சாத்தினார் அந்தரி
“ ஒட்டாம இருக்குகற பார்த்திரத்த பயன்படுத்திறதால தான் ,மக்க மனுஷனோடு ஒட்டாம இருக்காங்க போல “என்று மனதில்
வருத்தத்துடன் உறங்கினாள் மாமியார் சுந்தரி

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/14143-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!