எழுத்தாளர்: வனஜா முத்துக்கிருஷ்ணன்
பழைய புடவையை விரித்துத் தின்பண்டங்களை நிழலைத் தேடி,வரிசையாக அடுக்கிய வாணி,
“ஐயா.. அம்மா …சக்கர மிட்டாய், கடலமிட்டாய், பிஸ்கோத்து வாங்கிக்கங்க” என்று அதில் மொய்க்கும் ஈக்களை தன் கைகளால் விரட்டியபடி கூவினாள் .
” பிரபலமான நடிகை வாணி கிழிஞ்ச புடவையோடு ஈயை விரட்டிகிட்டு, சாலையில பலகாரங்களை விக்கறாங்கடோய்.!! பாவம்.
பரமபத விளையாட்டுல வர ஏணிப்படிகளில் ஏறி
சரசரவென பாம்பு போல இறங்கி இந்த நிலமைக்கு வந்துட்டாங்க ” என்று அதைப் படப்பிடிப்பு என்று அறியாமல் உரக்கக் கூவினான் வேலு.
முற்றும்.