10 வரி போட்டிக் கதை: பரிகாரம்

by admin 1
53 views

எழுத்தாளர்: புனிதா பார்த்திபன்

“ஒண்ணும் கவலப்படாதீங்க. கடைக்குள்ள ஒரு பரிகார பூஜையப் போட்டுட்டா போதும். வியாபாரம்
பெருக்கெடுத்துரும்” என நேற்று மாலை ஜோசியர் சொன்ன வார்த்தைகள் புதுத்தெம்பு தந்திருந்தன.
இதோ இந்தத் திருமண நிகழ்வை முடித்துவிட்டு பரிகாரப் பொருட்கள் வாங்கப் புறப்பட வேண்டும் என
நினைத்தபடி மண்டபத்தில் ஒலித்த மேலை நாட்டுப் பாணி இசை வந்த திசையைத் திரும்பிப் பார்த்த
எனக்குள் பெரும் வியப்பு.
“நாதஸ்வரம் சிவம்”, அக்கூட்டத்தில் ஏதோ நவீன கருவியை வாசித்துக் கொண்டிருந்தார்.
அவர் ஒரு இடைவெளியில் இறங்கிவர, ஓடிப்போய் பிடித்துக் கொண்டேன்.
“சிவம் அண்ணே! நீங்க எங்க இங்க? நாதஸ்வரம் தானே வாசிப்பீங்க”
“ஆமா தம்பி, இப்போலாம் நாதஸ்வரம் வாசிக்க யாரு கூப்புடுறா? எல்லாம் கம்ப்யூட்டர வச்சு பாட்டு
போட்டுக்குறாங்க. காலத்துக்கு ஏத்த மாதிரி மாறிட்டேன் தம்பி. இந்த சாக்ஸஃபோனும், நாதஸ்வரம் மாதிரி
ஊதுறது தான். முதல்ல சிரமப்பட்டேன். அப்புறம் பழகிடுச்சு. முக்கியமா இப்ப நான் “நாதஸ்வரம் சிவம்”
இல்ல, “சாக்ஸோஃபோன் சிவம்” என சிரித்தபடி கடந்து சென்றார்.
“பதினைந்து வருசமா ஓகோன்னு ஓடுன மளிகைக்கடை! இப்ப சுத்தமா வியாபாரமே இல்ல” என
ஜோசியரைத் தேடிய எனக்கு கடையில் நான் செய்ய வேண்டிய பரிகாரம் தெளிவாய் புரிந்தது.

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/12351-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!