எழுத்தாளர்: நந்தினி கிருஷ்ணன்
அமெரிக்காவிலிருந்து மகன் மருமகள் பேரன் பேத்தி எல்லோரும் வர பாட்டி பார்வதியும் தாத்தா மகாதேவனும் மிகவும் மகிழ்ந்து போயினர். அங்கு நாகரிகமாக இருப்பார்கள் என்று தாத்தா எப்போதும் வேட்டி கட்டிக்கொள்பவர் கூட அரை ட்ராயர் வாங்கி போட்டுக் கொண்டார். வீட்டிற்கு வந்த பேரன் தாத்தா “எனக்கு உன்னிடம் இருக்கும் வேட்டிகளை கொடு” என்று கேட்டவுடன் “என்னடா நீ அமெரிக்காவில் இருக்கிறாய் உனக்கு எதற்கு வேட்டி?” என்று கேட்டவுடன் “தாத்தா வேட்டிதான் சௌரியமாக இருக்கும் இங்கு இருக்கும் வரை நானும் அப்பாவும் தினமும் வேட்டி தான் கட்டிக் கொள்ளப் போகிறோம் அதுதான் வசதியாக இருக்கும்” என்று சொன்னவுடன் தாத்தா வெட்கத்துடன் தலைகுனிந்து கொண்டே தன்னிடம் இருந்து வேட்டிகளை எடுத்து பேரனுக்கும் மகனுக்கும் கொடுத்தார். இதை பார்த்த பாட்டி “பரவாயில்லை நம் மருமகள் நல்ல பாரம்பரியத்துடன் வளர்த்திருக்கிறார்” என்று சொல்லி வேட்டிக் கட்டி கொண்ட பேரனை கட்டி அணைத்து முத்தமிட்டாள்
நன்றி
