எழுத்தாளர்: நா.பா.மீரா
மோரீஸ் பழம் என்ன விலைப்பா?
மூணு பழம் இருபது ரூபா சார்.
கொள்ளையா இருக்கே ஆறு பழம் இருபதுன்னா கொடு.
நமக்குன்னு வந்து சேருறாங்க பாரேன் மனதுக்குள் முணுமுணுத்தவாறே ஆறு பழங்கள் கவரில் போட்டுக் கொடுத்தான் .
பெருமையுடன் வீடு திரும்பியவரை எதிர்கொண்ட மனைவி-
ஏங்க நம்ம கிருஷ் டியூஷன் முடிஞ்சு வரவழியிலே ரோட்டுல கிடந்த வாழைப்பழத்தோலை கவனிக்காம வழுக்கி விழுந்துட்டானாம்.
டாக்டர் ஹேர் கிராக்குன்னு பான்டேஜ் போட்டிருக்கார்.
கணவனின் முகத்தில் ஈயாடவில்லை.
முற்றும்.