10 வரி போட்டிக் கதை:    முதியோர் காதல்

by admin 1
78 views

தாத்தா பாட்டியின் 50-வது திருமண நாளுக்காக கல்லூரியில் படிக்கும் சிவா கேக் வாங்கிக் கொண்டு வந்தான். அதை பார்த்தது இருவரும் மகிழ்ச்சியாக கேக் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டி கொண்டனர் அதை மிக அழகாக சிவா படம் எடுத்து விட்டான்.  இந்த வயதிலும் தாத்தாவும் பாட்டியும் அன்புடன் கேக் ஊட்டிக் கொள்வதை பார்த்தவுடன் அவனுக்கு மன மகிழ்ச்சியாக இருந்தது.

தன் பெற்றோரின் திருமண நாளை மிக சிறப்பாக கொண்டாட உதவிய தன் மகன் சிவாவை பார்த்து அம்மாவும் அப்பாவும் உனக்கு பெரியோரின் ஆசி நிச்சயம் கிடைக்கும் என்று பெருமையுடன் வாழ்த்தினர். கல்லூரியில் புகைப்பட போட்டி ஒன்று வைக்க தாத்தா பாட்டி தின்பண்டம் ஊட்டும் இந்த போட்டோவை அதற்கு முதியோர் காதல் என்ற தலைப்பு இட்டு கொடுத்தான். 

இவனுடைய இந்த புகைப்படம்  முதல் பரிசு கோப்பையை பெற்றுத்தர ஆசையுடன் அதைக் கொண்டு வந்து தாத்தா பாட்டி இடம் கொடுத்து காலில் விழுந்து வணங்கினான்.  முதியோரை மதிக்கும் சிவாவின் குணத்தைக் கண்டு அவனை ஈன்றெடுத்த தாய் பெரிதும் மகிழ்ந்தாள்.  கூட்டுக் குடும்பம் என்ற கடலில் எல்லோரும் சிரிக்க அது மகிழ்ச்சி என்று அலையாக தவழ்ந்து வந்தது. 

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/14143-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!