10 வரி போட்டிக் கதை: வெண்குடை

by admin 1
62 views

எழுத்தாளர்: புனிதா பார்த்திபன்

“கொஞ்சமாவது அவளக் கண்டிக்கிறீயா? இப்பப் பாரு மழையில நல்லா மாட்டிக்கப் போறோம்.”
“நான் என்னங்க பண்ண? மிட்டாய் வாசம் வந்ததும் நான் கத்த கத்த கேட்காம வெளிய ஓடுறா”
“சரி வேகமா வா. அதோ வந்துட்டா பாரு, வீட்டுக்கு போய் திட்டிக்கலாம். முதல்ல ஓடு”
“ஐயோ! மழை வந்துருச்சுங்க. இன்னைக்கு குடும்பத்தோட சாகப் போறோம்”
” அம்மா ஐயோ! தூரல் பெருசாகுதே. மூச்சு முட்டுது, தண்ணி என்ன இழுக்குது”
“கடவுளே எங்களக் காப்பாத்த மாட்டியா” என அந்தக் குடும்பத் தலைவன் கத்திக் கொண்டே ஓட,
சட்டென மழை நின்றுபோயிருந்தது.
மரண பயத்தில் ஓடிய மூவரும் மூச்சுவாங்க நிமிர்ந்து பார்த்தனர் . நேற்று பெய்த மழையில்
முளைத்திருந்த காளான் அந்த சிற்றெறும்பு குடும்பத்தைக் காத்து பெரும் வெண்குடையாய்
நின்றிருந்தது.

முற்றும்.

10 வரி கதை போட்டியில் கலந்துக்  கொண்டு வெற்றி பெறுங்கள்!

மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!