எழுதியவர்: இந்துமதி நடராஜன்
சொல்: துடைப்பம்
காலையில் வேலைக்கு போகும் பரபரப்பில் இருந்த மீனா சமையல், 6 வயது குழந்தை ரீனாவை எழுப்பி ஸ்கூலுக்கு கிளப்ப என பம்பரமாக சுழன்றாள்.
அவள் கணவர் குமார் படுக்கையில் இருக்கும் அவர் அம்மாவைக் கவனித்துக் கொள்வார். அவங்களுக்கு வேண்டிய எளிதாக செரிக்க கூடிய இட்லி, இடியாப்பம், குழைந்த சாதம், ஒரு வேக வைத்த காய், சூப் என்று தினமும் தயார் செய்து டேபிளில் எடுத்து வைத்து. அவரின் உதவியாளர் கிட்ட தரணும்.
மறந்துடாம வேலைக்காரி அம்புஜத்தை துடைப்பம் வாங்கி வரச் சொல்லு மீனா . வீடு ஒரே குப்பையா கிடக்கு என்றான் குமார்.
முந்தாநாள் பாத்ரூம் போன ரீனா கரப்பான் பூச்சியைப் பார்த்து பயந்து கத்த, குமார் துடைப்பத்தால் அடிக்க பீஸ் பீஸானது துடைப்பம்.
அம்புஜத்தை போனில் அழைத்து துடைப்பம் மறக்காம வாங்கிட்டு நல்லா பெருக்கிடு . வெள்ளிக்கிழமைல துடைப்பம் வாங்கக் கூடாது மீனாம்மா , நாளைக்கு என்றாள் அவள் .
முற்றும்.
📍 போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.