படித்ததில் பிடித்தது: தாத்தாவின் நேர்மை

by Nirmal
56 views

எங்கள் வீட்டிற்கு இன்று காலை 8 மணிக்கு வயதான தாத்தா ஒருவர் வந்தார், “அம்மா பசிக்கிறது. சாப்பாடு இருந்தால் கொஞ்சம் போடுங்க” என்றார்.

“10 நிமிடம் இங்கயே உட்காருங்க.. சாப்பாடு கொண்டு வரேன்” என்று சமையலறைக்குள், சென்று காலை மெனு இட்லி – சட்னி. அவசர அவசரமாக தயார் செய்து, உணவு பரிமாற எடுத்துகொண்டு வெளியே வந்தேன்.

10 நிமிடத்தில் எங்கள் வீட்டை சுற்றியுள்ள குப்பை, ,புல் மற்றும் தேவையற்ற செடிகளை கையாலேயே பிடுங்கி சுத்தம் செய்துகொண்டு இருந்தார். மனம் கலங்கியது…

என் தாத்தாவை விட பெரியவராக இருப்பார். நடக்கவும் முடியவில்லை,

கை,கால் நடுக்கம் வேறு. “தாத்தா இங்கே வாங்க”, என்று கூறியதும் சாப்பிட அமர்ந்து “2 இட்லி போதும் வயதாகிவிட்டது அதிகமா சாப்பிட முடியவில்லை” என்றார்.

2 இட்லி சாப்பிடவா வீட்டை சுற்றி சுத்தம் செய்து சாப்பாடு கேட்கிறார். மிகவும் வருத்தமாக உள்ளது.

உங்களுக்கு உணவு அளித்து பாதுகாத்த தாய், தந்தையை வீதியில் விட்டுவிடாதீர்கள்.

தாத்தா சாப்பிட்டு விட்டு கிளம்பும்போது அவரது கையில் 100 ரூபாய் கொடுத்ததும் மகிழ்ச்சியில் “இன்னொரு நாள் வரேன்.. வேலை ஏதாச்சும் இருந்தால் சொல்லுங்க, செஞ்சிட்டு போறேன்” என்றார்.

“உழைக்காமல் எனக்கு சாப்பிட பிடிக்கவில்லை” என்றார்.

வீட்டின் வெளியே சுத்தம் செய்து உணவு கேட்கும் தாத்தாவின் நேர்மை மனம் சிலிர்க்க வைத்தது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!