எழுத்தாளர்: ஷாலினி தங்கப்பாண்டியன்

by admin
107 views

உங்கள் பெயர்:

ஷாலினி தங்கப்பாண்டியன்

வெளியிட்டிருக்கும் புத்தகங்கள்:

எனக்கானவனே, கோதையின் காதலில் வீழ்ந்தனன், உள்ளம் மிதந்து போகுதே!

உங்கள் படைப்புகள் கிடைக்கும் இடம்:

https://pratilipi.page.link/qbHi7D2B1mgbDQcAA

1. உங்கள் படைப்பிற்கான தேடலின் போது நீங்கள் கண்டறிந்த அல்லது கற்றறிந்த ஒரு புதிய விஷயம் என்ன?

நான் சைக்காலஜி கதை எழுதலாம்னு நிறைய தேடுவேன்! அதே மாதிரி, நான் இப்போ எழுதிட்டு இருக்கிற கதையில் வர்ற ஒரு ஹீரோயினோட ஜாப் child behavioral technician – அதனால் அந்த வேலையைப் பத்தி நிறைய தெரிஞ்சிக்கிட்டேன்.

“முகிழ்நகை முத்துக்கள்” ஒரு கதையை ஆரம்பிச்சேன்… அதில், வர்ற கில்லருக்கு ஒரு நோய் இருக்கனும். ஆனால் அது வித்தியாசமாக இருக்கனும்னு அதை வச்சுத் தான் அவனைக் கண்டுபிடிக்கனும்னு தேடுன அப்போ அதைப் பத்தி நிறைய சுவாரசியமான தகவல்கள் கிடைச்சது.

2. உங்கள் எழுத்தில் உருவான எந்த கதாப்பாத்திரத்தின் வழி தற்போதைய உலகத்தை நீங்கள் காண விரும்புகீறீர்கள்?! அது ஏன்?

என்னோட “நினைவெல்லாம் நீயே கண்ணம்மா” கதையில் வர்ற மதியழகி! ஆனால் அவங்களை நான் கதையில் கொன்னுட்டேனே!!!

3. நீங்கள் எழுத யோசித்த அல்லது தயக்கம் கொண்ட எழுத்து வகை எது? காரணம் என்ன?

“நினைவெல்லாம் நீயே கண்ணம்மா” கதையில் வர்ற ஒரு விஷயம் அது தான் அந்தக் கதையோட மெயின் கருத்து… அதை எழுத ரொம்பவே யோசிச்சேன்.

4. ரைட்டர் ப்லோக் (writer block) பிரச்சனையை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

ஃபர்ஸ்ட் ரைட்டர் பிளாக் என்னை ரொம்பவே படுத்தி எடுத்துச்சு. ஆனால் அதை விட என்னோட ஹெல்த் இஷ்யூஸால் நிறைய கதைகளைப் பாதியிலேயே விட்டுட்டு லேட் ஆக முடிச்சேன். சோ, ரைட்டர் பிளாக் வந்தாலும் எப்படியாவது கதையை எழுதி முடிக்கத் தான் பார்ப்பேன்.

5. எழுத்தாளர்களுக்கு இருக்க கூடாதென்று நீங்கள் நினைக்கும் ஒன்றெது?

நம்மளை நம்மளே தாழ்த்திக்கக் கூடாது. அதே சமயம் தலைகனமும் இருக்கக் கூடாது!

6. எழுதிட நீங்கள் தேர்ந்தெடுக்கும் நேரம் எது? ஏன்?

ஒரு நாளில் எத்தனை கதையோட யூடி எழுதுவேன்றதை பொறுத்தது 😶‍🌫️ மோஸ்ட்லி மிட்நைட் தான்!

7. அப்படி உங்களுக்கொரு வாய்ப்பு கிடைத்தால், இதுவரை நீங்கள் படித்த சங்க இலக்கிய கதைகளில் (பொன்னியின் செல்வன்/ மஹாபாரதம்/ ராமாயணம்/ இன்னும் பல) எந்த கதையின் நடையை அல்லது ஏதாவது ஒன்றை அந்நாவலில் மாற்றி அமைத்திட விரும்பிடுவீர்கள்? அது ஏன்?

அந்த ரைட்டரே அப்படி நினைச்சிருந்தா மாத்திருக்கலாமே! அது அவங்களோட கதை நான் எப்படி மாத்த முடியும்?

8. எங்கு உங்களின் கதை சார்ந்த விடயங்களை பற்றி யோசிப்பீர்கள்?

மோஸ்ட்லி காலேஜ்ல, தூங்கும் போது…

9. எழுத்தாளர்களுக்கு இருக்க வேண்டுமென்று நீங்கள் நினைக்கும் ஒன்றெது?

தன்னம்பிக்கை, நமக்கான நியாயமான அங்கீகாரத்தைப் பெற எப்பவும் தயங்கக் கூடாது!

10. நீங்கள் எழுதியதில் உங்களின் மாஸ்ட்டர் பீஸ் எது? ஏன்?

என்னைப் பொருத்தவரை நான் யூஜி தேர்ட் இயர் படிக்கிற அப்போ இருந்து கதை எழுத ஆரம்பிச்சேன். அப்போ எனக்கு எதுவுமே தெரியாமல் எழுதின, எழுதிட்டு இருக்கிற என்னோட எல்லா கதைகளும் மாஸ்டர் பீஸ் தான்!

11. நீங்கள் எழுதியிருக்கவே கூடாதென்று நினைத்த உங்களின் ஒரு படைப்பு எது?

அப்படி எதுவும் இல்லை.

12. எழுத்துத் துறையை பொறுத்த மட்டில் உங்களின் தாரக மந்திரம் என்ன?

எழுதுறது மூலமாக முதல்ல நான் என்னைத் திருப்திப்படுத்திக்கனும். அப்பறம் என்னோட ஸ்டைலைப் பிடிச்சுப் படிக்கிற ரீடர்ஸை வெயிட் பண்ண வைக்காமல் சீக்கிரம் கதையை எழுதி முடிக்கனும்.

எழுத்துத் துறைன்னு இல்லை, எப்பவும் எனக்கு நானே சொல்லிக்கிற ஒரு தாரக மந்திரம் : “No One is YOU and That is your Super Power” ✨

இந்த அருமையான கேள்வி , பதிலைத் தொகுத்து வழங்கியதற்காக உங்களுக்கு மிக்க நன்றிகள் எமி சிஸ் ❤️

எழுத்துலகில் மென்மேலும் வளர வாழ்த்துகள் ❤️

நன்றி. வணக்கம்.

அறிவிப்பு: சித்திரைத் திருவிழா சிறுகதை போட்டியில் கலந்துக்கொள்ள விரும்புபவர்கள்  கீழிருக்கும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

https://aroobi.com/%e0%ae%85%e0%ae%b0%e0%af%82%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5/

You may also like

Leave a Comment

error: Content is protected !!