எழுத்தாளர்: மு.லதா
ஏ புள்ள பாரு, மாப்ள வீட்டுக்காரங்க வந்துட்டுப் போனாங்களாமே? என்னாச்சு
என்ற எதிர் வீட்டுப்பாட்டியிடம்
போ பாட்டி, என்றாள் தரையில் கோலமிட்டபடி, பார்வதி.
அவள் மூலமாக எல்லா விஷயங்களையும் தெரிந்து கொண்ட பாட்டி,அப்ப இனிமே
ஒதுங்க பிரச்னையே இல்லன்னு சொல்லு
புள்ள என்றாள் குதூகலத்துடன்.
மும்பை மாதிரி பெரிய பெரிய சீமைலெல்லாம் கக்கூஸ் தனியா வீட்குள்ளயே
இருக்குமாமே,அப்பாடி இனிமே நிம்மதியா இருக்கலாம் என்ற மகிழ்ச்சியுடன் திருமண
நாளை ஆவலுடன்
எதிர்பார்க்கலானாள்.
சில மாதங்கள் கழித்துக் கனவுகளுடன் மும்பையில் காலடி எடுத்து வைத்தாள்.
கார் ஒரு சேரிப்பகுதியில் நுழையவே,நாற்றம் குடலைப் பிடுங்கியது.
இதற்கு மேல் கார் போகாது என்று சொல்லவே, இறங்கி நடந்து ஆரத்தி எடுக்கப்பட்டு
வீட்டிற்குள் சென்றவுடன்,
அவளது கண்கள் ஆவலுடன் கழிவறையைத் தேடியது.
நிதர்சனம் என்னவோ வேறாக இருக்க,
கனவுகளைத் தொலைத்து,அன்றாட வாழ்க்கைக்குள் தன்னைப் புகுத்திக்கொண்ட
பார்வதி, இன்று வரை பொதுக்கழிப்பறை முன்பு தன்முறைக்கு வரிசையில் ஏக்கத்துடன்
காத்திருக்கலானாள், மும்பை
தாராவியில் வாழ்க்கைப்பட்ட பார்வதி.
முற்றும்.
10 வரி கதை போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றி பெறுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
