என் நுகர்தலுக்குள் பொருந்தாத
உன் வியர்வைத்துளியொன்று காற்றில் உலர்ந்து கொண்டிருக்கிறது…
உன்னோடு பயணிக்கும் யாரோ அருகிலிருந்தபடி
சுவாசித்துக் கொண்டிருக்கலாம்…
தூரத்தில் தவம் கிடக்கும் என் மூக்கு துவாரங்களுக்கு
சுவாசிக்க சிரமமாக தான் இருக்கிறது..
அங்கிருந்து இங்கு வரும் உன் சுவாசத்தை
பத்திரமாக கொண்டு வரும் காற்றைத் தான் எதிர்பார்க்கிறேன்
எனக்கென சேமித்து வைப்பதற்காக
விம்மிக் கொண்டிருக்கும் என் கடைசி சுவாசத்தில் நீ வந்துவிடுவதாக ….
நிழலி🌺