படம் பார்த்து கவி: வீட்டின் தரைகளில்

by admin 2
59 views

வீட்டின் தரைகளில் துளைப்போடும் மின்சாரமில்லா ட்ரில்லிங் மிசினல்லவா நீ …. !

உன்னைப் பிடிக்க கடைகளில் பேஸ்ட் பொடி ஒட்டும் அட்டை என பல விதங்களில் வைத்தும் எதற்கும் சிக்காமல் வாழும் தனிக்காட்டு ராஜாவல்லவா நீ … !

சமையலுக்கு தக்காளியை காணவில்லையே என்று உன்னை கேட்கலாம் என்று வந்தால் உன்னையே காணுமே நீ தேடப்படும் குற்றவாளியல்லவா நீ… !

தண்ணீர் அருந்தாமல் வாழும் உயிரினங்களில் ஒன்றல்லவா நீ … !

எலி வலையானாலும் தனி வலை வேண்டும் என்றும் எலியைப்போல் கொறித்துச் உண்ணாதே என்றும் கூறும் அளவிற்கு சிலவற்றின் எடுத்துகாட்டல்லவா நீ…‌!

                 - சுபாஷ் மணியன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!